கடுங்குளிர், பனிப்பொழிவால் நடுங்கும் ஜப்பான்

கடுங்குளிர், பனிப்பொழிவால் நடுங்கும் ஜப்பான்

2 mins read
c9a5ffb5-d7e6-4644-ade8-88375d84c59d
-

தோக்­கியோ: ஜப்­பா­னில் ஏற்­பட்­டுள்ள கடுங்­கு­ளிர், மிகக் கடு­மை­யான பனிப்­பொ­ழிவு கார­ண­மாக குறைந்­தது 13 பேர் மாண்­டு­விட்­ட­னர், 19 பேர் படு­கா­யம் அடைந்­துள்­ள­னர்.

வடக்­கில் உள்ள ஹொக்­காய்­டோ­வி­லி­ருந்து தென்­மேற்­கில் உள்ள குயூ­ஷு­வுக்குப் பலத்த காற்று வீசு­வ­தாக ஜப்­பான் வானிலை மையம் தெரி­வித்­தது.

இந்­தச் சூழ­லைக் கருத்­தில்­கொண்டு கிறிஸ்­து­மஸ் வார­யி­று­தி­யின்­போது எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்­கு­மாறு ஜப்­பா­னிய மக்­களை அந்­நாட்டு அர­சாங்­கம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

ஜப்­பா­னின் சில பகு­தி­களில் பனிப்­பு­யல் ஏற்­படும் அபா­யம் இருப்­ப­தாக முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வி­டங்­களில் உள்ள மக்­கள் வெளியே வரா­மல் வீட்­டுக்­குள் பத்­தி­ர­மாக இருக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.

தேவை ஏற்­பட்­டால் மட்­டுமே வெளியே செல்­லு­மாறு அதி­கா­ரி­கள் கூறி­னர்.

ஜப்­பா­னைக் கடுங்­கு­ளிர் வாட்டி வரும் நிலை­யில், ஹொக்­காய்­டோ­வில் உள்ள 2,077 மீட்­டர் உய­ர­முள்ள தொகாச்சி மலை­யில் சிக்­கித் தவித்த ஹாங்­காங் நாட்­ட­வர் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் மருத்­து­வ­ம­னை­யில் தமது உயி­ருக்­கா­கப் போரா­டு­வ­தா­க­வும் ஜப்­பா­னிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அவ­ரு­டன் இருந்த இரு­வர் நல­மாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட 200 உள்­நாட்டு விமா­னச் சேவை­கள் நேற்று முன்­தி­னம் ரத்து செய்­யப்­பட்­டன.

நிகாட்டா மாநி­லத்­தைச் சேர்ந்த சாடோ தீவில் கடந்த ஐந்து நாள்­

க­ளாக அங்­குள்ள மக்­கள் மின்­சா­ரம் இன்றி தவிப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சில இடங்­களில் உள்­கட்­ட­மைப்பு­ கள் சேத­ம­டைந்­தன. குறி்ப்­பாக, சில வீடு­களின் கூரை­க­ளைப் பலத்த காற்று பெயர்த்­துக்­

கொண்­டுச் சென்­றது.

ஹொக்­காய்­டோ­வில் பல மின்­கம்­பங்­கள் சாய்ந்­தன. பொருத்­தப்­பட்ட 244 சூரிய சக்தி தக­டு­களில் பாதி சேத­ம­டைந்­தன.

இதற்­கி­டையே, நாளை வரை ஜப்­பா­னெங்­கும் பல பகு­தி­களில் கடு­மை­யான பனிப்­பொ­ழிவு ஏற்­படும் என்று அந்நாட்டு வானிலை மையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

ஆனால் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் வெயில் அதி­க­மாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அமெ­ரிக்­கா­வில் பனிப்­பு­யல்

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வை­யும் கடுங்­கு­ளிர், பலத்த காற்று புரட்­டிப் போட்டு வரு­கிறது.

இத­னால் அங்கு இயல்பு நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. கிறிஸ்­து­மஸ், புத்­தாண்டு விடு­மு­றையை முன்­னிட்டு அமெ­ரிக்­கர்­கள் பலர் பய­ணம் மேற்­கொள்­வது வழக்­கம். ஆனால் இம்­முறை கடு­மை­யான வானிலை கார­ண­மாக அவர்­க­ளது பய­ணத் திட்­டங்­கள் பாதிக்­கப்­படும் என்று நம்­பப்­ப­டு­கிறது. அமெ­ரிக்­கா­வில் விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அத்­து­டன் கடு­மை­யான பனிப்­பொ­ழிவு கார­ண­மாகச் சாலை­களில் பல விபத்­து­கள் ஏற்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பய­ணம் செய்­யும்­போது மிகுந்த கவனம் தேவை என்று அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.