'அனைத்துத் துறைகளிலும் திறனாளர்களை வெளிநாடுகளிடம் மலேசியா இழக்கிறது'

'அனைத்துத் துறைகளிலும் திறனாளர்களை வெளிநாடுகளிடம் மலேசியா இழக்கிறது'

2 mins read
deb1f65d-c5c7-4f4f-aaa2-14bde2c69f32
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சிய சுகா­தா­ரத்­துறை மட்­டு­மல்­லாது, மலே­சி­யா­வின் அனைத்­துத் துறை­களும் அங்கு பணி­பு­ரி­யக்­கூ­டிய உள்­ளூர் திற­னா­ளர்­களை வெளி­நா­டு­க­ளி­டம் இழப்­ப­தாக மலே­சி­யா­வின் புதிய சுகா­தார அமைச்­சர் ஸலிஹா முஸ்­தஃபா தெரி­வித்­துள்­ளார்.

ஒவ்­வோர் ஆண்­டும் குறைந்­தது 30 தலை­சி­றந்த புதிய மருத்­து­வர்­களை சிங்­கப்­பூ­ரி­டம் மலே­சியா இழப்­ப­தாக மலாயா பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த மருத்­துவத்­துறை பேரா­சி­ரி­யர் அடீபா கம­ருல்­ஸா­மான் தெரி­வித்­ததை அடுத்து, அதற்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் அமைச்­சர் ஸலி­ஹா­வின் கருத்­து­கள் அமைந்­தன. மலே­சி­யத் திற­னா­ளர்­கள் மலே­சி­யா­வில் பணி­பு­ரி­யா­மல் மற்ற நாடு­களில் வேலை செய்­வது மலே­சி­யா­வுக்கு ஏற்­படும் இழப்பு என்­றார் அவர்.

இந்­நி­லை­யில், மலே­சிய மருத்­து­வர்­க­ளுக்­கான பயிற்­சி­களை மேம்­ப­டுத்­து­வது, தெளி­வான வாழ்க்­கைத் தொழில் பாதையை வகுப்­பது, பணி­யி­டச் சூழலை மேம்­

ப­டுத்­து­தல் போன்­றவை குறித்து சுகா­தா­ரத்­துறை பரிந்­து­ரைத்­தி­ருப்­பதை அமைச்­சர் ஸலிஹா சுட்­டி­னார். இருப்­பி­னும், பயிற்சி பற்­றாக்­குறை, பதவி உயர்வு வாய்ப்­பு­கள் போன்ற பிரச்­சி­னை­களை களைந்­தா­லும் மலே­சிய மருத்­து­வர்­கள் வெளி­நா­டு­களில் வேலை செய்­வதை முழு­மை­யா­கத் தடுத்­து­வி­ட­லாம் என்ற உத்­த­ர­வா­தத்­தைக் கொடுக்க முடி­யாது என்­றார் அவர்.

"சிங்­கப்­பூர் நாணயத்­தின் மதிப்பு மலே­சி­யா­வை­விட கிட்­டத்­தட்ட மூன்று மடங்கு அதி­கம். எனவே ஜோகூர் மாநி­லத்­தைச் சேர்ந்த பலர் சிங்­கப்­பூரில் வேலை செய்­கின்­ற­னர், ஆனால் இதே கருத்தை அனைத்­துச் சூழல்­க­ளி­லும் பயன்­

ப­டுத்த முடி­யுமா? சிங்­கப்­பூ­ரின் சில மருத்­து­வர்­கள்­கூட ஆஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­களில் பணி­பு­ரி­கின்­ற­னர். சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரத்­து­றை­யும் இதே சவாலை எதிர்­நோக்­கு­கிறது," என்று அமைச்­சர் ஸலிஹா கூறி­னார். இந்நிலையில், சிங்கப்பூரில் வேலை செய்து தமது ஆற்றலைப் பெருக்கிக்கொண்டு பிறகு அந்த அனுபவங்களை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பணிபுரிய திட்டமிடுவதாக சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய தாதி ஒருவர் கூறினார்.