ஜப்பானின் ஹொக்காய்டோ மாநிலத்தில் உள்ள கிட்டாமி நகரில் வாகன நிறுத்துமிடத்தை மறைத்த பனி. ஜப்பானின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து குறைந்தது 17 பேர் மாண்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சில இடங்களில் 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் உயரத்திற்குப் பனி சேர்ந்தது. சில பகுதிகளில் வாகனங்கள் சாலைகளில் பனியில் சிக்கும் நிலை உருவெடுத்தது.
குறிப்பாக ஹொக்காய்டோ மாநிலம் கடும் பனிப்பொழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

