தென்கொரியாவின் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு

தென்கொரியாவின் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு

1 mins read
752b1f3d-ef3b-4504-89ad-5191b48d3f7c
-

சோல்: தங்­க­ளின் எல்­லைப் பகு­தி­யில் வட­கொ­ரியா பல ஆளில்லா வானூர்­தி­களை செயல்­ப­டுத்­தி­ய­தாக தென்­கொ­ரியா குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. அதைத் தொடர்ந்து தென்­கொ­ரிய ராணு­வம் ஆகாயப் படை விமா­னங்களை தயார்நிலையில் வைத்தது, வடகொரியாவுக்கு எச்­ச­ரிக்கை விடுக்க துப்­பாக்கிச்­சூடு நடத்­தி­யது.

கியோஞ்சீ மாநி­லத்­தைச் சுற்­றி­யி­ருக்­கும் எல்­லைப் பகு­தி­களில் வட­கொ­ரி­யா­வின் ஆளில்லா வானூர்­தி­கள் அத்­து­மீறி நுழைந்­த­தாக தென்­கொ­ரிய ராணு­வம் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டது. அதைத் தொடர்ந்து சோல் பல ஆகா­யப் படை விமா­னங்­க­ளை­யும் ஹெலி­காப்­டர்­க­ளை­யும் செயல்­படுத்­தி­யது.

தென்­கொ­ரி­யா­வின் ஓர் ஆகா­யப் படை விமா­னம் காங்­வோன் மாநி­லத்­தில் உள்ள ஹோய்ங்­சி­யோங் பகு­தி­யில் நேற்று காலை விழுந்து நொறுங்­கி­யது. விமானம் வோன்ஜூ நகி­ரி­லி­ருந்து புறப்­பட்ட சிறிது நேரத்­தில் அச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. அதில் இருந்த இரண்டு விமானி­களும் சரி­யான நேரத்­தில் தங்­க­ளின் இருக்­கை­களை வெளி­யேற்­றும் பாது­காப்பு முறை­யைச் செயல்­படுத்­திப் பிழைத்­துக்­கொண்­ட­னர். இரு­வ­ரும் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

தென்­கொ­ரிய நேரப்­படி நேற்று காலை சுமார் 10.25 மணி­யி­லி­ருந்து அந்நாட்டின் சில பகு­தி­களில் வட­கொ­ரி­யா­வின் ஆளில்லா வானூர்­தி­கள் பல காணப்­பட்­டன. முன்­ன­தாக 2014ஆம் ஆண்­டில் வட­கொ­ரிய ஆளில்லா வானூர்­தி­கள் தென்­கொ­ரி­யா­வின் பாஜு, பாய்ங்­யோங் உள்­ளிட்ட பகு­தி­களில் காணப்­பட்டன.