கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் ஓர் உணவகத்தில் எலி ஒன்று பொறித்த கோழி இறைச்சியை உண்ணும் காட்சி காணொளியில் பதிவானது. அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது.
அதைத் தொடர்ந்து மலேசியாவின் சுகாதார சோதனைக் குழு ஒன்று பாண்டான் இண்டா பகுதியில் அமைந்துள்ள அந்த உணவகத்தில் சோதனை நடத்தியது. 14 நாள்களுக்கு உணவகத்தை மூடுமாறு கடந்த சனிக்கிழமையன்று உத்தரவிடப்பட்டது.
உணவகத்தில் சுத்தம் சரியாகக் கடைப்பிடிக்கப்படாததால் அவ்வாறு உத்தரவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

