ரோஹிங்யா அகதிகளுக்குப் பெரும் துயரம் தந்த 2022

ரோஹிங்யா அகதிகளுக்குப் பெரும் துயரம் தந்த 2022

1 mins read
6ed91b27-17e1-4b7e-9bee-8a249bdac638
-

நேப்­பிடோ: அண்­மை­யில் 180 ரோஹிங்யா அக­தி­க­ளைக் கொண்ட படகு ஒன்று மூழ்­கி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது. அச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து ரோஹிங்யா அக­தி­க­ளைப் பொறுத்­த­வரை இவ்­வாண்டு ஆக மோச­மான ஆண்­டு­களில் ஒன்­றாக உரு­வெ­டுத்­துள்­ளது.

சென்ற மாத இறு­தி­யில் பங்­ளா­தே­ஷி­லி­ருந்து புறப்­பட்ட படகு கட­லில் காணா­மற்­போ­னது. அதி­லி­ருந்த அனைத்து 180 ரோஹிங்யா அக­தி­களும் மாண்­ட­தாக அஞ்­சப்­ப­டு­கிறது என்று ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் அக­தி­கள் அமைப்பு தெரி­வித்­தது. இவ்­வாண்டு மட்­டுமே கிட்­டத்­தட்ட 200 ரோஹிங்யா அக­தி­கள் மாண்­டி­ருக்­க­லாம் அல்­லது கட­லில் காணா­மற்­போ­யி­ருக்­க­லாம் என்று அமைப்பு அஞ்­சு­கிறது.

"காணா­மற்­போ­யி­ருக்­கும் 180 பேர் எங்­கே­யா­வது இன்­னும் உயி­ரோடு இருக்­க­வேண்­டும் என்று நாங்­கள் நம்­பிக்­கை­யு­டன் இருக்­கி­றோம்," என்று அமைப்­பின் பேச்­சா­ளர் ஒரு­வர் சொன்­னார்.

பங்­ளா­தே­ஷின் மிக­வும் மோச­மான நிலை­யில் இருப்­ப­தா­கச் சொல்­லப்­படும் அக­தி­கள் முகாம்­க­ளி­லி­ருந்து தப்­பி­யோட பல ரோஹிங்யா அக­தி­கள் முயற்சி செய்து வரு­கின்­ற­னர். அப்­போது அசம்­பா­வி­தங்­கள் நேர்­வ­தாக ஐக்­கிய நாட்டு நிறு­வன அக­தி­கள் அமைப்பு குறிப்­பிட்­டது. மியன்­மா­ரி­லிந்து வந்த சுமார் ஒரு மில்­லி­யன் ரோஹிங்யா அக­தி­கள் பங்­ளா­தே­ஷில் இருக்­கும் முகாம்­களில் வசித்து வரு­கின்­ற­னர்.

பெரும்­பான்மை பெளத்த மக்­க­ளைக் கொண்ட மியன்­மா­ரில் பொது­வாக முஸ்­லிம்­க­ளாக இருக்­கும் ரோஹிங்யா மக்­க­ளுக்­குக் குடி­யு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­தில்லை. மேலும், அவர்­கள் உரி­ம­மின்றி தெற்­கா­சி­யா­வி­லி­ருந்து வந்­த­வர்­க­ளா­க­வும் வகைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, பல வாரங்­க­ளா­கக் கட­லில் சிக்­கி­ய ரோஹிங்யா அக­தி­கள் சிலர் இந்­தோ­னீ­சி­யா­வின் அச்சே மாநி­லத்­தின் கடற்கரை ஒன்­றில் காணப்­பட்­ட­னர்.