ஸ்பெயின் பேருந்து விபத்தில் அறுவர் மரணம்

ஸ்பெயின் பேருந்து விபத்தில் அறுவர் மரணம்

1 mins read
3b9020e0-e42e-45c7-81b2-b953a2ea6163
-

மட்­ரிட்: ஸ்பெ­யி­னில் பய­ணிகள் பேருந்து ஒன்று பாலத்­தி­லி­ருந்து ஆற்­றுக்­குள் விழுந்­த­தில் குறைந்­தது அறு­வர் மாண்­ட­னர், இரு­வர் காய­முற்­ற­னர். இச்­சம்­ப­வம் ஸ்பெ­யி­னின் வட­மேற்­குப் பகு­தி­யில் நேற்று முன்தினம் நிகழ்ந்­தது.

பேருந்­தின் 63 வயது ஓட்­டு­நரும் பெண் பயணி ஒரு­வ­ரும் விபத்­தில் உயிர் தப்­பிய இரு­வர். காய­ம­டைந்த அவர்­கள் அரு­கில் இருக்­கும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

பேருந்து ஓட்­டு­நர் மது­பா­னமோ போதைப்­பொ­ருளோ உட்­கொள்­ள­வில்லை என்­பது பரி­சோ­த­னை­களில் தெரி­ய­வந்­த­தெ­னக் காவல்­துறை பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார். ஆகக் கடைசி நிலவரப்படி மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாகக் கூறப்பட்டது.