'இஸ்லாமாபாத் மேரியட் ஹோட்டல் தாக்கப்படலாம்'

'இஸ்லாமாபாத் மேரியட் ஹோட்டல் தாக்கப்படலாம்'

1 mins read
19c41ae4-6685-49bb-8ff2-e55867f77596
-

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தான் தலை­ந­கர் இஸ்­லா­மா­பாத்­தில் உள்ள பிர­பல 'மேரி­யட்' ஹோட்­டல் தாக்­கப்­படக்­கூ­டும் என்று அந்­நாட்­டின் அமெ­ரிக்க தூத­ர­கம் எச்­ச­ரித்­துள்­ளது. விடு­மு­றைக் காலத்­தில் எந்­நே­ர­மும் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­ப­ட­லாம் என்று தூத­ர­கம் குறிப்­பிட்டது.

பாகிஸ்­தா­னில் உள்ள அமெ­ரிக்க ஊழி­யர்­கள் அனை­வ­ருக்­கும் அந்த ஹோட்­ட­லுக்­குச் செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தூத­ர­கம் அதன் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

எட்டு ஆண்­டு­களில் முதன்­முறை­யாக இஸ்­லா­மா­பாத்­தில் சென்ற வாரம் தற்­கொ­லைத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. மூவர் மாண்ட அச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து இந்­ந­ட­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.