சாபா மாநிலத்தில் பேரலைகளால் தரைமட்டமான வீடுகள்

சாபா மாநிலத்தில் பேரலைகளால் தரைமட்டமான வீடுகள்

1 mins read
c2002b04-b25b-4057-8b4b-0528e4aebe8d
-

கோத்­த­கி­ன­பாலு: மலே­சி­யா­வின் சாபா மாநி­லத்­தில் உள்ள கடற்­க­ரை­யில் அமைந்­துள்ள கடல்­நீர் கிரா­மத்­தில் திடீ­ரென ஏற்­பட்ட உயர் கடல் அலை­யால் அங்­கி­ருந்த 108 வீடு­கள் இடிந்து விழுந்­தன.

சனிக்­கி­ழமை எழு­பது வீடு­களும் ஞாயிற்­றுக்­கி­ழமை 70 வீடு­களும் இடிந்து விழுந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மீண்­டும் உயர் கடல் அலை நிக­ழ­லாம் என்­றும் அத­னால் மேலும் அதி­க­மான வீடு­கள் இடிந்து விழும் அபா­யத்­தில் உள்­ள­தா­கவும் கூறப்­படு­கிறது. அந்த வீடு­களில் வசித்த 600க்கு மேற்­பட்­டோர் நிவா­ரண மையங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தச் சம்­ப­வத்­தில் உயி­ரி­ழப்பு ஏதும் இல்லை. அங்கு உயர் கடல் அலை என்­னும் பொங்கு ஓதம் வரு­வது இயல்பு. ஆனால் இது­போன்று பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் வரும் பேரலை 'கிங் டைட்' என்று அழைக்­கப்­ப­டு­கிறது. இது­போன்ற பேரலை ஆண்­டுக்கு ஓரிரு முறை இப்­ப­கு­தி­யில் நிக­ழும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.