அமெரிக்கா: பனிப்புயலில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

அமெரிக்கா: பனிப்புயலில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

1 mins read
766c02ca-9b51-4b37-8677-67522b2cbed0
-

நியூ­யார்க்: அமெ­ரிக்­கா­வின் வட­கி­ழக்­குப் பகு­தி­களில் என்­றும் இல்­லாத வகை­யில் இப்­போது பனிப்­பு­யல் வீசு­கிறது.

நூற்­றாண்­டின் பனிப்­பு­யல் என்று அழைக்­கப்­படும் இப்­பு­ய­லில் சிக்­கிக்கொண்ட ஏரா­ள­மா­னோரை மீட்க நியூ­யார்க்­கில் அவ­சர குழுக்­கள் கள­மி­றங்­கி­யுள்­ளன.

இந்­தப் பனிப்­பு­ய­லுக்கு மாண்­டோர் எண்­ணிக்கை ஐம்­பது ஆக உயர்ந்­துள்­ளது. நியூ­யார்க் மாநி­லத்­தில் மட்­டும் 28 பேர் மாண்­ட­னர்.

அமெ­ரிக்­கா­வில் மோச­ம­டைந்து வரும் பரு­வ­நிலை மாற்­றங்­க­ளால் ஏரா­ள­மான விமா­னச் சேவை­கள் தாம­த­மா­கி­யுள்­ளன. பல இடங்­களில் மின்­சார விநி­யோ­கம் தடை­பட்­டுள்­ளன.

வாக­னப் போக்­கு­வ­ரத்­துச் சேவைத் தடை­யால் மக்­க­ளின் இயல்­பு­நிலை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

நியூ­யார்க் மாநி­லத்­தில் பனிப்­பு­ய­லில் சிக்­கிக்­கொண்ட வாக­னங்­களில் இருந்து உடல்­களை மீட்டு வரு­கின்­ற­னர். பலர் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பனிப்­பு­ய­லால் 15,000க்கு மேற்­பட்ட விமா­னச் சேவை­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. கடந்த திங்­கள்­கிழமை மட்­டும் 2,600 விமா­னச் சேவை­கள் நிறுத்­தப்­பட்­டன என்று கூறப்­ப­டு­கிறது. "பனிப்­பு­ய­லில் சிக்கி மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கக்­கூடும்," என்று அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார். நியூ­யார்க் மாநி­லத்­தின் இரண்­டா­வது பெரிய நக­ர­மான பஃப்ளோ­வில் பெரும்­பா­லான சாலை­களைப் பனி மூடி­ய­தால் அங்­குள்ள குடி­யி­ருப்­பா­ளர்­களைப் பாது­காப்­பான இடங்களில் பதுங்­கிக்கொள்­ளு­மாறு அந்­ந­கர உயர் அதி­கா­ரி­கள் மக்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.