ஆசிய காற்பந்து சம்மேளன வெற்றியாளர் காற்பந்துப் போட்டியில் நேற்று லாவோசை எதிர்கொண்ட சிங்கப்பூர் அணி 2-0 என வெற்றி பெற்றது.
அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு உறுதியாக வேண்டுமெனில் லயன்ஸ் அணியும் அதிக கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டியிருந்தது. ஆனால், சிங்கப்பூரின் வாய்ப்புகளைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அது குறைந்த கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
சிங்கப்பூரின் முதல் கோலை இர்ஃபான் ஃபாண்டி போட, அதன் இரண்டாவது கோலை ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஷாவல் போட்டார்.

