எரிசக்தி நிலைகளைத் தாக்கி அழிப்பதில் ரஷ்யாவுக்கு சிக்கல்

எரிசக்தி நிலைகளைத் தாக்கி அழிப்பதில் ரஷ்யாவுக்கு சிக்கல்

2 mins read
f82953ed-bc77-40e8-8fd9-a76a7cf052ec
-

ரஷ்ய விமானப் படைத் தளம் மீது தாக்குதல்; மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர்

கிவ்: ரஷ்ய ராணு­வத்­தால் ஓர­ள­வுக்­குத்­தான் போராட முடி­யும் என்­றும் அதை எதிர்த்து தொடர்ச்­சி­யான தாக்­கு­தல் தொடுக்­கப்­பட்­டால் அதை எதிர்த்­துப் போராட அந்­நாடு திண­றும் என்றும் உக்­ரேன் மதிப்­பிட்­டுள்­ளது. அத­னால்­தான் ரஷ்­யா­வின் எல்­லைக்­குள் உக்­ரேன் துணிச்­ச­லு­டன் தாக்­கு­தலை முடுக்கி­விட்­டுள்­ளது என்று முன்­னாள் ராணுவ அதி­கா­ரி­களும் ஆய்­வா­ளர்­களும் கூறி­யுள்­ள­னர்.

உக்­ரேன் ராணு­வம், நெடுந்­தொலைவு செல்லும் ஆளில்லா விமானம் மூலம் ரஷ்­யா­வின் முக்­கி­யப் பகு­தி­யின் வோல்கா ஆற்­றோ­ரம் அமைந்­துள்ள விமா­னத் தளத்­தின் ஓடு­பா­தை­யில் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து இதுவரையிலும் உக்ரேன் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை.

இந்­தச் சம்­ப­வத்­தில் மூன்று பேர் கொல்­லப்­பட்­ட­தாக ரஷ்ய தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

இன்­னொரு சம்­ப­வத்­தில் ரஷ்­யா­வின் சரோட்­டோவ் நக­ரின் அரு­கே­யுள்ள விமா­னத் தளத்தை நோக்­கிப் பறந்து வந்த ஆளில்லா விமா­னம் ஒன்று ரஷ்ய ஆகா­யப்­ப­டை­யால் சுட்டு வீழ்த்­தப்­பட்­டது என்­றும் ரஷ்ய தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­தத் தாக்­கு­தலால் ரஷ்யா தனது போர் விமா­னங்­களை வேறு இடங்­க­ளுக்கு மாற்ற வேண்­டிய சூழ­லுக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

இத­னால், உக்­ரே­னின் எரி­வாயு நிலை­யங்­க­ளைத் தாக்கி அழிக்­கும் தனது திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தில் ரஷ்யா சிக்­கலை எதிர்­நோக்­கி­யுள்­ளது. அத்­து­டன் ரஷ்யா, தனது விமா­னத் தளங்­களில் ஏவு­க­ணை­களை நிலை­நி­றுத்தி உக்­ரேன் மீது தாக்­கு­த­லைத் தொடர முடி­யாத நிலைக்கு ரஷ்­யா­வைத் தள்­ளி­யுள்­ளது இந்தத் தாக்­கு­தல்.

இருப்­பி­னும் அணு­சக்­தியைப் பயன்­ப­டுத்­து­வ­தில் ரஷ்யா தீவி­ரம் காட்­ட­வில்லை என்­றும் உக்­ரேன் மீது ரஷ்­யா­வால் இதற்­கு­மேல் பெரிய அள­வில் தாக்­கு­தல் மேற்­கொள்ள முடி­யாது என்­றும் உக்­ரே­னிய மக்­களும் அதி­கா­ரி­களும் நம்­பு­வதாகக் கூறப்படுகிறது.

இந்­நி­லை­யில் உக்­ரே­னின் முன்­னாள் தற்­காப்பு அமைச்­சர் ஆண்ட்ரி ஸகோ­ரோட்­னுக், அந்­நாட்டு அதி­பர் ஸெலன்­ஸிக்கு அறி­வுரை கூறி­யுள்­ளார். அதா­வது, யாரா­வது உன்­னைத் தாக்­கி­னால், திருப்­பித் தாக்­கு­தல் நடத்து என்­பதுதான் அந்த அறி­வுரை.

அதற்­கேற்ப, உக்­ரேன் முதன்­மு­த­லாக ரஷ்­யா­வின் இரா­ணு­வத் தளங்­க­ள், விமா­னப் படைத் தளங்­க­ள், மத்­திய ரஷ்­யா ஆகியவற்றை இலக்­கா­கக் கொண்டு நெடுந்­தொ­லைவு ஏவு­கணை மூலம் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், இந்­தத் தாக்­கு­தலை உக்­ரேன்­தான் மேற்­கொண்­டதா என்­பதை என்­னால் உறு­திப்­படுத்த முடி­யாது என்று திரு ஆண்ட்ரி, செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்டி ஒன்­றில் தெரி­வித்­துள்­ளார்.

இன்­னொரு முன்­னாள் ராணுவ உயர் அதி­காரி செர்­ஹிய் ஹிராப்ஸ்கி, ரஷ்­யா­வின் முக்­கிய விமா­னப்­ப­டைத் தளங்­கள், எரி­சக்தி வளங்­கள், ஆயு­தக் கிடங்­கு­கள் மற்­றும் ராணு­வத் தளங்­கள் ஆகி­ய­வற்றை இலக்­கு­க­ளா­கக் கொண்டு உக்­ரேன் ராணு­வத்­தால் தாக்­கு­தல் மேற்­கொள்ள முடி­யும் என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அந்த அதிகாரி தெரி­வித்துள்ளார்.