பாலியல் தொந்தரவு பகிரங்கம்: ராணுவ வீராங்கனை துணிச்சல்

பாலியல் தொந்தரவு பகிரங்கம்: ராணுவ வீராங்கனை துணிச்சல்

1 mins read
9af41998-1dd9-49a3-b0e9-c045ab8ad90a
-

தோக்­கியோ: காணொளி எடுத்து அதை யூடி­யூ­பில் பதி­வேற்­றம் செய்து தான் பாலி­யல் தொந்­த­ர­வுக்கு ஆளா­னதை பகி­ரங்­க­மாக்­கி­யுள்ளார் ஜப்­பா­னைச் சேர்ந்த ராணுவ வீராங்­கனை ரீனா கொனோய் (படம்).

23 வயது கொனோய் அதி­காரி­க­ளி­டம் புகார் தந்­த­போது அவர்­கள் கண்­டு­கொள்­ள­வில்லை. அதைத் தொடர்ந்து இவ்­வாண்டு ஜூன் மாதம் இவர் தனது பெய­ரு­டன் தனக்கு ஏற்­பட்ட பாலி­யல் தொந்­த­ரவு குறித்த விவ­ரங்­க­ளைக் கொண்ட காணொ­ளியை யூடி­யூ­பில் வெளி­யிட்­டார். அைதய­டுத்து ஐந்து தேசிய சேவை­யா­ளர்­கள் ராணு­வத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர். மேலும், நான்கு அதி­காரி­கள் தற்­கா­லி­க­மா­கப் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர் அல்­லது அவர்­களுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டது.