டாக்காவின் முதல் பெருவிரைவு ரயில் சேவை

டாக்காவின் முதல் பெருவிரைவு ரயில் சேவை

1 mins read
4df342ff-f03d-49d6-8cc4-08abbbeb2b1a
-

டாக்கா: உல­கில் அள­வுக்­க­தி­க­மாக மக்­கள்­தொகை இருக்­கும் நக­ரங்­களில் ஒன்­றான பங்­ளா­தேஷ் தலை­ந­கர் டாக்­கா­வில் முதன்­மு­றை­யாக உள்­ளூர் பெரு­வி­ரைவு ரயில் சேவை தொடங்­கப்­பட்­டுள்­ளது. கூட்ட நெரி­ச­லால் இந்­ந­க­ரில் ஏற்­படும் போக்­கு­வ­ரத்து நெருக்­க­டி­யைக் கையாள புதிய ரயில் சேவை கைகொ­டுக்­கும் என்று நம்­பப்­படுகிறது.

20 கிலோ­மீட்­டர் தூரம் உள்ள இந்த ரயில் பாதையின் ஓர் அங்கத்தை பங்­ளா­தேஷ் பிர­த­மர் ஷேக் ஹசீனா நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்­து­வைத்­தார். 'லைன் 6' என்­ற­ழைக்­கப்­படும் இந்த ரயில் பாதை இப்­போ­தைக்கு டாக்­கா­வின் வடக்­குப் பகு­தி­யை­யும் அர­சாங்­க அலு­வ­ல­கங்­கள், மருத்து­வ­ம­னை­கள் ஆகி­யவை இருக்கும் மத்­தி­யப் பகு­தி­யை­யும் இணைக்­கும். வருங்­கா­லத்­தில் நக­ரின் தெற்­குப் பகு­தி­யில் இருக்­கும் நிதி மைய­மான மோட்­டி­ஜீல் பகுதிக்­கும் ரயில் பாதை செல்­லும்.

இந்த ரயில் பாதைக்கு ஜப்­பான் நிதி­யு­தவி அளிக்­கிறது. டாக்­கா­வில் மேலும் இரண்டு ரயில் பாதை­களுக்­கும் ஜப்­பான் நிதி வழங்­கு­கிறது. மூன்று ரயில் பாதை­களும் அமைக்­கப்­பட்ட பிறகு தினந்­தோறும் அவற்­றின்­வழி சுமார் இரண்டு மில்­லி­யன் மக்­கள் பய­ணம் செய்­வர் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.

பங்­ளா­தே­ஷில் ஏற்­படும் சாலைப் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லால் ஆண்டு­தோ­றும் அந்­நாட்­டின் பொரு­ளி­யலுக்­‌குப் பல பில்­லி­யன் டாலர் இழப்பு ஏற்­ப­டு­கிறது. போக்குவரத்து நெரிசலால் தலைநகர் டாக்காவில் சராசரியாக ஒரு வாகனம் மணிக்கு ஏழு கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்கிறது. 305 சதுர கிலோ­மீட்­டர் பரப்­ப­ள­வைக் கொண்ட டாக்­கா­வில் 10.3 மில்­லி­யன் மக்­கள் வசிக்­கின்­ற­னர்.