பெய்ஜிங்: சீனாவின் உற்பத்தித்துறை கடந்த மாதம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சீனாவில் உற்பத்தி தொடர்ந்து மூன்று மாதங்
களாக வீழ்ச்சியைக் கண்டது.
கடந்த மூன்று ஆண்டுகள் இல்லாத அளவில் உற்பத்தி மிக வேகமாக குறைந்தது.
சீனாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவில் கொவிட்-19 முதன்முதலாகத் தலைதூக்கியபோது சீனாவில் உற்பத்தித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த மாதம் அது மீண்டும் பெருமளவில் சரிந்தது.
சீனாவில் அதிகமானோருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதால் தற்காலிக ஊழியர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் விநியோகச் சங்கிலி பல இடையூறுகளை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, கொவிட்-19 அறவே இல்லாத இலக்கைத் திடீரென்று மாற்றி கட்டுப்
பாடுளை சீனா தளர்த்தியதால் கிருமிப் பரவல் கட்டுக்கடங்
காமல் இருப்பதாக அந்நாட்டு மக்கள் பலர் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவதாக ஊடகங்கள் தெரிவித்தன.
இத்தகைய கடும் விமர்சனங்கள் பரவாமல் இருக்க சீனா
நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

