மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு ஏற்கப்பட்டது

மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு ஏற்கப்பட்டது

1 mins read
a174d4aa-adbb-49b5-8f82-c5f57f54a6a0
-

தெஹ்ரான்: ஈரா­னிய அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­தற்­கா­க­வும் பொதுச் சொத்தை சேதப்­ப­டுத்­தி­ய­தற்­கா­க­வும் 25 வயது நூர் முகம்­மட்­ஸா­டே­வுக்கு அந்­நாட்டு நீதி­மன்­றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மரண தண்டனை விதித்­தது.

இந்­நி­லை­யில், மரண தண்­ட­னையை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்ய நூர் முடி­வெ­டுத்­தார்.

அவ­ரது மேல்­மு­றை­யீட்டு மனுவை ஈரா­னிய உச்ச நீதி­மன்­றம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

இதன் விளை­வாக நூரின் வழக்கு மீண்­டும் விசா­ரிக்­கப்­படும் என்று நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை நூர் மறுத்­துள்­ளார்.

அதி­கா­ரி­கள் தம்மை வற்

­பு­றுத்தி குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொள்ள வைத்­த­தாக நூர் தெரி­வித்­துள்­ளார். இதற்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யில் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு அவர் பட்­டி­னிப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்.

தலை­யங்கி அணி­யா­த­தற்­காக தடுத்­து­வைக்­கப்­பட்ட பெண் ஒரு­வ­ரின் மர­ணத்தை அடுத்து, கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் ஈரா­னில் உள்ள பல பகு­தி­களில் ஆர்­ப்­பாட்­டங்­­கள் நடைபெற்றன.

ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­களில் இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஈரான் ஏற்கெனவே நிறைவேற்றிவிட்டது.