கோலாலம்பூர்: மலேசியப் பிரதமராகத் தமது முதல் அதிகாரத்
துவப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அன்வார் இப்ராகிம்.
இம்மாதம் 8ஆம் தேதியன்று அவர் இந்தோனீசியாவுக்குச் செல்கிறார்.
அந்த இரண்டு நாள்
அதிகாரத்துவப் பயணத்தின்போது அவர் இந்தோனிசிய அதிபர் ஜோக்கோ விடோடோவைச் சந்தித்துப் பேசுவார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியா-இந்தோனீசியா எல்லை வரையறை, வர்த்தகம், மனிதவளம், செம்பனை எண்ணெய் ஆகியவை தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும்
கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மியன்மாரில் நிலவும் அரசியல் நெருக்கடிநிலை குறித்தும் கலந்துரையாடப்படும் என்று நம்பப்படுகிறது,
இவ்வாண்டு ஆசியானுக்கு இந்தோனீசியா தலைமை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் அன்வாருடன் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஸாம்பிரி அப்துல் காதர் இந்தோனீசியாவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பு மலேசியாவின் பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு, திரு அன்வார் நேற்று முதன்முறையாக ஜோகூர்
மாநிலத்துக்குச் சென்றார்.
அங்கு ஜோகூர் மன்னர் இப்ராகிம் இஸ்கந்தரை அவரது அரண்மனையில் சந்தித்தார். அப்போது ஜோகூர் பட்டத்து இளவரசரும் அங்கு இருந்த
தாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸியை அன்வார் சந்தித்தார்.

