மலேசியாவில் பிரபலமடையும் 'வாடகை இயந்திரமனிதன்' திட்டம்

மலேசியாவில் பிரபலமடையும் 'வாடகை இயந்திரமனிதன்' திட்டம்

2 mins read
930e3a82-cf00-4ca6-b0a2-570b60396c25
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வில் இயந்­தி­ர­ம­னி­தர்­களை வாட­கைக்கு எடுக்­கும் திட்­டம் பிர­ப­ல­

ம­டைந்து வரு­கிறது.

சிறிய, எளிய பணி­க­ளைச் செய்ய இந்த இயந்­தி­ர­ம­னி­தர்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக, செல­வு­க­ளைக் குறைக்க ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­து­வ­தற்­குப் பதி­லாக இந்த இயந்­தி­ர­ம­னி­தர்­களைப் பல மலே­சிய வர்த்­த­கங்­கள் வாட­கைக்கு எடுக்­கின்­றன.

தலை­ந­கர் கோலா­லம்­பூர், ஜார்ஜ்­ட­வுன், ஜோகூர் பாரு போன்ற இடங்­களில் இந்த இயந்­தி­ர­ம­னி­தர்­க­ளுக்­கான தேவை அதி­கம் இருப்­ப­தாக இயந்­தி­ர­

வி­யல் நிறு­வ­னம் ஒன்­றின் வர்த்­தக மேம்­பாட்டு மேலா­ளர் திரு ஜெரமி இங் தெரி­வித்­தார்.

இந்த இயந்­தி­ர­ம­னி­தர்­க­ளுக்கு கோலா­லம்­பூ­ரில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

மலே­சி­யா­வில் உள்ள மற்ற இடங்­க­ளைக் காட்­டி­லும் கோலா­லம்­பூ­ரில் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் அதி­கம் என்று கூறிய திரு இங், இத­னால் செல­வைக் குறைக்க நிறுவனங்கள் இயந்­தி­ர­ம­னி­தர்­களைப் பயன்­ப­டுத்­துவதாகத் தெரி­வித்­தார். இயந்­தி­ர­ம­னி­தர்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தால் அதிக அள­வி­லான ஊழி­யர்­கள் தேவை இல்லை என்­றார் அவர்.

இந்த இயந்­தி­ர­ம­னி­தர்­களை விநி­யோ­கிக்­கும் நிறு­வ­னங்­கள் அவற்­றைத் தற்­போது வாட­கைக்கு விடு­கின்­ற­ன. எனவே, இயந்­தி­ர­ம­னி­தர்­க­ளைப் பயன்­

ப­டுத்த விரும்­பு­வோர் அவற்றை வாங்க தேவை­யில்லை.

பல வர்த்­த­கங்கள் கேட்­டுக்­கொண்­ட­தற்கு இணங்க, இயந்­தி­ர­ம­னி­தர்­களை வாட­கைக்கு எடுக்­கும் திட்­டம் கடந்த ஆண்டு துவக்­கத்­தி­லி­ருந்து நடை­மு­றைப் படுத்­தப்­பட்டதாகத் திரு இங் தெரி­வித்­தார்.

ஓர் இயந்­தி­ர­ம­னி­தனை வாங்க குறைந்­தது 35,000 ரிங்­கிட் (S$10,700) செல­வா­கும். ஆனால் மாதந்­தோ­றும் 1,500 ரிங்­கிட்­டி­லி­ருந்து 2,000 ரிங்­கிட் வரை செலுத்தி இயந்­தி­ர­ம­னி­தனை வாட­கைக்கு எடுக்­க­லாம்.

எத்­தனை நாள்­க­ளுக்கு வாடகை எடுப்­பது என்­பது குறித்து வாடிக்­கை­யா­ளர்­கள் முடி­வு­செய்­ய­லாம் என்­றும் முத­லில் வாட­கைக்கு எடுத்து பிறகு பிடித்­தி­ருந்­தால் இயந்­தி­ர­ம­னி­தனை வாங்­க­லாம் என்றும் திரு இங் கூறி­னார். உணவகத்தின் சமையலறையிலிருந்து வாடிக்கை யாளர்களின் மேசை­க­ளுக்கு உண­வைக் கொண்டு செல்­வது, ஒரே நேரத்­தில் பல தட்­டு­க­ளைத் தூக்­கு­வது, கட்­ட­டங்­களில் உள்ள பல்­வேறு இடங்­க­ளைச் சென்­ற­டைய வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குத் திசை காட்­டு­வது, தக­வல் அளிப்­பது போன்ற பணி­களை இந்த இயந்­தி­ர­ம­னி­தர்­க­ளால் செய்ய முடி­யும் என்­றார் திரு இங்.