கார்மீது விட்டுச்செல்லப்பட்ட பொட்டலம் வெடித்ததில் ஆடவர் மரணம்

கார்மீது விட்டுச்செல்லப்பட்ட பொட்டலம் வெடித்ததில் ஆடவர் மரணம்

1 mins read
5e9cd70c-3a32-4d60-bd49-686e63b5f2db
-

கோலா­லம்­பூர்: உண­வ­கத்­தில் உணவு பரி­மா­று­ப­வ­ரின் காரின்­மீது பொட்­ட­லம் ஒன்று விட்­டுச் செல்­லப்­பட்­டது.

அந்த பொட்­ட­லம் வெடித்­துச் சித­றி­ய­தில் அந்த ஆட­வர் மாண்­டார்.

இந்­தச் சம்­ப­வம் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் நிகழ்ந்­தது.

இதைக் கொலை வழக்கு என மலே­சி­யக் காவல்­துறை வகைப்

­ப­டுத்தி விசா­ரணை நடத்தி வரு­கிறது. அம்­பாங்­கில் உள்ள பாண்­டான் இன்டா பகு­தி­யில் அந்த 28 வயது ஆட­வ­ரின் வேலை­யி­டத்­துக்கு வெளியே இந்த வெடிப்பு நிகழ்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. தமது காரின்­மீது விட்­டுச்­செல்­லப்­பட்ட பொட்­ட­லத்தை அந்த ஆட­வர் எடுத்­துப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது இரவு 8.55 மணி அள­வில் அது வெடித்­தது.

அந்த ஆட­வ­ருக்கு உட­லி­லும் கைக­ளி­லும் மிக மோச­மான காயங்­கள் ஏற்­பட்­ட­தாக அம்­பாங் ஜெயா காவல்­துறை கூறி­யது.

அவர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். ஆனால் சிகிச்சை பல­னின்றி அவர் உயிர் பிரிந்­தது.

சம்­பவ இடத்­தைச் சுற்றி காவல்­து­றை­யி­னர் தடுப்பு போட்டு விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

சாலை­யில் ரத்த திட்­டு­கள் தென்­பட்­ட­தாகவும் மாண்ட ஆட­வ­ரின் காரின் முன்­ப­குதி சேத­ம­டைந்­தி­ருந்­த­தா­க­வும்

செய்­தி­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.