மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் விமான நிலையத்தில் மின்தடை ஏற்பட்டதால் புத்தாண்டு தினத்தன்று அந்நகருக்கு வந்து சென்ற விமானச் சேவைகளில் இடையூறுகள் நேர்ந்தன. பல விமானச் சேவைகள் தாமதமடைந்தன.
சுமார் 280 சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஆசியா முழுவதும் சுமார் 56,000 பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டன்று தங்களின் குடும்பத்தாருடன் நேரம் செலவிட ஆவலாகக் காத்திருந்த பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சிலர் சமூக ஊடகங்களில் தங்களின் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

