ஆஸ்திரேலியா, கனடா சேர்ந்துகொண்டன

ஆஸ்திரேலியா, கனடா சேர்ந்துகொண்டன

1 mins read
bacfd449-1ce7-42a4-be1c-730d5e23dfc0
-

சிட்னி: சீனா, ஹாங்­காங், மக்­காவ் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து ஆஸ்­தி­ரே­லியா செல்­வோர் தங்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­ப­டா­ததை உறு­திப்­படுத்த பய­ணம் மேற்­கொள்­வதற்கு முன்பு கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­ளவேண்­டும். பய­ணம் மேற்­கொள்­வ­தற்கு முன்பு 48 மணி­நே­ரத்­துக்­குள் பரி­சோ­த­னையை மேற்­கொண்­­டி­ருக்­க­வேண்­டும்.

இம்­மா­தம் ஐந்­தாம் தேதி­யி­லிருந்து இந்த விதி­முறை நடப்­புக்கு வரும். இது ஒரு தற்­காலி­க­மான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை என்று ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சுகா­தார அமைச்­சர் மார்க் பட்­லர் கூறி­னார்.

சீனா, ஹாங்­காங், மக்­காவ் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து கனடா செல்­லும் பய­ணி­க­ளுக்­கும் வரும் ஐந்­தாம் தேதி­யி­லி­ருந்து இந்த விதி­முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

வட ஆப்­பி­ரிக்க நாடான மொரோக்­கோ­வில் சீனா­வி­லி­ருந்து வரும் பய­ணி­களுக்­குத் தடை விதிக்­கப்­பட்டுள்­ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முற்­றி­லும் அழிக்­கும் போக்கை அண்­மை­யில் சீனா திடீ­ரெ­னக் கைவிட்­டது. அதையடுத்து அந்­நாட்­டில் அடை­யா­ளம் காணப்­படாத மோச­மான கொவிட்-19 கிருமி வகை பர­விக்­கொண்­டி­ருக்­க­லாம் என்ற அச்­சம் நில­வு­வதால் பல நாடு­கள் சீனா­வி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்­கான விதி­மு­றை­களை முடுக்­கி­விட்டுள்­ளன.

சீனா­வில் கிரு­மிப் பர­வல் நில­வ­ரத்­தைக் கணிக்­கப் போது­மான தக­வல்­கள் வழங்­கப்­படாதது இதற்கு முக்­கி­யக் கார­ணம். தக­வல்­களை வழங்­கு­மாறு அண்மையில் உல­கச் சுகா­தார நிறு­வ­னமும் சீனா­வைக் கேட்­டுக்­கொண்­டது.

இது­வரை இந்­தியா, ஜப்­பான் தென்­கொ­ரியா, அமெ­ரிக்கா, இஸ்­ரேல், பிரிட்­டன், பிரான்ஸ், ஆஸ்­தி­ரே­லியா, கனடா, இத்தாலி உள்­ளிட்ட சுமார் 12 நாடு­கள் சீனா­வி­லி­ருந்து வரும் பயணிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளன.

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கட்டாயப் பரிசோதனை விதிமுறை