வத்திகன்: வத்திகனில் தற்போது போப் பதவியில் இருக்கும் போப் பிரான்சிஸ், மறைந்த போப் பெனடிக்டின் இறுதிச் சடங்கை வழிநடத்துவார். போப் பதவியில் இருக்கும் ஒருவர் அவருக்கு முன்பு பொறுப்பு வகித்தவரின் இறுதிச் சடங்கை வழிநடத்துவது நவீன வரலாற்றில் இதுவே முதல்முறை.
இதற்கிடையே, வத்திகனுக்கு அனுப்பிய கடிதங்களில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் இருவரும் போப் பெனடிக்டுக்கு அனுதாபம் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

