உயர் அதிகாரிகள் அலட்சியம்; ரஷ்யா கொந்தளிப்பு

உயர் அதிகாரிகள் அலட்சியம்; ரஷ்யா கொந்தளிப்பு

2 mins read
f25c9dd6-3281-45d2-a815-5afb7f6999b5
-

கியவ்: புத்­தாண்­டுக்கு முதல் நாளன்று உக்­ரே­னி­யப் படை­கள் நடத்­திய தாக்­கு­த­லில் ரஷ்ய வீரர்­கள் பலர் மாண்­ட­னர்,

இத்­தாக்­கு­த­லில் குறைந்­தது 63 ரஷ்ய ராணுவ வீரர்­கள் மடிந்­த­தாக ரஷ்­யத் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

உக்­ரே­னின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள டொனெட்ஸ்க் பகு­தி­யின் மகிவ்கா நக­ரில் இருந்த ஆயு­தக் கிடங்­கைக் குறி­வைத்து உக்­ரே­னி­யப் படை­கள் ஏவு­

க­ணைத் தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக அரசியல் விமர்­சகர்கள் ­கூறுகின்றனர்.

அந்த ஆயு­தக் கிடங்­கிற்கு அரு­கில் தற்­கா­லிக முகாம் ஒன்றை அமைத்து அதில் ரஷ்ய ராணுவ வீரர்­கள் தங்­க­வைக்கப்­பட்­ட­தாக அவர்­கள் கூறி­னர்.

ஆயு­தக் கிடங்­கைக் கிட்­டத்­தட்ட நான்கு ஏவு­க­ணை­கள் தாக்கியதாகவும் அரு­கில் இருந்த முகா­மும் அழிந்து அதில் இருந்த ராணவ வீரர்­கள் மாண்­ட­தா­க­வும் ரஷ்ய ராணு­வத்­தைச் சேர்ந்த வலைப்­ப­தி­வா­ளர்­கள் தெரி­வித்­த­னர். இந்­தத் தாக்­கு­த­லில் நூற்­றுக்­க­ணக்­கான ரஷ்ய ராணுவ வீரர்­கள் மாண்­ட­தாக உக்­ரேன் கூறி­யது.

ஆனால் இதை ரஷ்யா

மறுத்­துள்ளது.

இதற்­கி­டையே, அந்­தத் தாக்­கு­தல் நிகழ்­வ­தற்கு முன்பே அது­தொ­டர்­பாக தக­வல்­கள் கிடைத்­த­தா­க­வும் சம்­பந்­தப்­பட்ட ரஷ்ய ராணு­வத் தள­ப­தி­க­ளுக்கு உட­ன­டி­யாக எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­தா­க­வும் ரஷ்ய தேசி­ய­வா­தி­களும் அந்­நாட்­டின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சில­ரும் தெரி­வித்­த­னர்.

இருப்­பி­னும், முகா­மில் இருந்த ராணுவ வீரர்­க­ளைப் பாது­காக்க போது­மான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று அவர்­கள் கொந்­த­ளித்­த­னர்.

எனவே, சம்­பந்­தப்­பட்ட ராணு­வத் தள­ப­தி­க­ளைத் தண்­டிக்க வேண்­டும் என்று அவர்­கள் குரல் எழுப்­பி­யுள்­ள­னர்.

கடந்த மாத இறு­தி­யில் உக்­ரேன் தலை­ந­கர் கியவ்­வை­யும் மற்ற நக­ரங்­க­ளை­யும் குறி­வைத்து இரவு நேரங்­களில் தொடர்ந்து பல ஆளில்லா வானூர்­தித் தாக்­கு­தல்­களை ரஷ்யா நடத்­தி­யது.

இதற்­குப் பதி­லடி தரும் வகை­யில் புத்­தாண்­டுக்கு முதல் நாளன்று நடத்­தப்­பட்ட தாக்­கு­தல் அமைந்­தது.

இந்­நி­லை­யில், உக்­ரேன் மீது போர் தொடுத்­துள்ள ரஷ்­யா­வுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கும் வகை­யில் ருமே­னி­யா­வின் கிழக்­குப் பகு­தி­யில், ரஷ்ய எல்­லைக்கு மிக அரு­கில் அமெ­ரிக்­கப் படை­கள் பயிற்­சி­யில் ஈடு­பட்டு வரு­வதாகத் தெரிவிக்கப்பட்டது.

ருமே­னி­யா­வின் வடக்­குப் பகு­தி­யில் உக்­ரே­னிய எல்­லைக்கு அரு­கி­லும் ருமே­னி­யப் படை­க­ளு­டன் இணைந்து அமெ­ரிக்க ராணுவ வீரர்­கள் பயிற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.