பாரிஸ்: சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளைப் பல நாடுகள் முடுக்கிவிட்டு வருகின்றன. அனைத்துலக விமானத் துறையைபைப் பிரதிநிதிக்கும் அமைப்பான 'ஐஏடிஏ' எனும் அனைத்துலக ஆகாயப் போக்குவரத்துச் சங்கம் அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த மூவாண்டுகளாக கொள்ளைநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை; அப்படியிருந்தும் பதறியபடி அவை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாக சங்கம் கூறியது.
நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அது இதைக் குறிப்பிட்டது.
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்து என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆகக் கடைசி நிலவரப்படி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான இத்தாலி, பிரான்ஸ் மட்டுமே சீனாவிலிருந்து வரும் பயணிகள் பரிசோதனை மேற்கொள்வதைக் கட்டாயமாக்கின. அனைத்து உறுப்பு நாடுகளும் சமமாக முடிவெடுக்கவேண்டும் என்று பிரான்ஸ் ஊக்குவித்தது. அதன் தொடர்பில் நேற்று அவசர சந்திப்பு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சீனாவிலிருந்து வரும் விமானங்களின் கழிவு நீரைச் சோதிக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ஆஸ்திரியா தெரிவித்திருந்தது.
முடுக்கிவிடப்படும் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகள்

