தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள 'வாட் பாங் நா நய்' ஆலயத்தில் சவப்பெட்டியில் படுத்து புத்தாண்டுச் சடங்கில் ஈடுபடும் பக்தர்கள். ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்க மேற்கொள்ளப்படும் அபூர்வ சடங்கு இது. தங்களின் கைகளுக்கு நடுவே அகர்பத்திகளையும் பூக்களையும் வைத்துக்கொண்டபடி பக்தர்கள் மாண்ட உடல்களைப் போல் சவப்பெட்டிகளில் படுத்துக்கொள்வர். பின்னர் பெளத்த பிக்குகள் சவப்பெட்டிகளின்மீது மந்திரம் ஓதுவர். இதைச் செய்தால் புத்தாண்டில் துரதிர்ஷ்டம் விலகி அதிர்ஷ்டம் தங்களை வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
படம்: இபிஏ

