கலிஃபோர்னியாவில் புயல் காற்று, கனமழையில் இருவர் மரணம்

1 mins read
04e45df8-e02c-4520-a29c-6a4f6f201932
-

சாக்­ர­மென்டோ: கலி­ஃபோர்­னியா சாக்­ர­மென்­டோ­வில் இரண்­டா­வது நாளாக தொடர்ந்து பெய்த கன­மழை மற்­றும் பலத்த காற்­றி­னால் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட வீடு­களில் மின்­சா­ரம் தடை

பட்­டது.

இடை­வி­டாது பெய்த மழை­யால் நிலச்­ச­ரிவு ஏற்­பட்டு வீடு­கள் கடு­மை­யாக சேதம் அடைந்­தன.

இதன் தொடர்­பில் மாண்ட இரு­வ­ரில், ஒரு­வர் பச்­சி­ளம் குழந்தை.

அக்­கு­டும்­பம் வசித்து வந்த தற்­கா­லிக வீட்­டில் மரம் விழுந்­த­தால் ழந்தை மாண்ட

தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

மேலும், எதிர்­பார்த்­த­தை­விட வெள்­ள­மும் இழப்­பும் குறை­வாக இருக்­கிறது. என்­றா­லும், தொடர்ந்து கனத்த மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தாக வானிலை அதி­கா­ரி­கள் முன­னெச்­ச­ரிக்கை செய்­துள்­ள­னர்.