வெர்ஜினியா: அமெரிக்காவில் ஆசிரியை ஒருவரைத் துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
வெர்ஜினியா மாநிலத்திலுள்ள ரிக்னெக் ஆரம்ப பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் அச்சிறுவன் வகுப்பறையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியையை சுட்டுவிட்டான்.
இதில் படுகாயமடைந்த 30 வயது ஆசிரியை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிர்ஷ்டவசமாக வகுப்பறையிலிருந்த மற்ற மாணவர்கள் யாரும் இதில் காயமடையவில்லை.
வர்ஜினியா மாநில பள்ளிகள் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பார்கர் கூறும்போது, "மிக அதிர்ச்சியாகவும் மனவேதனையாகவும் உள்ளது. பிள்ளைகள் கைகளில் துப்பாக்கி கிடைக்காததை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்றார்.
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வரும் அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.
இவற்றில் பாதி உயிரிழப்புகள் கொலைச் சம்பவங்கள். மற்றவை விபத்து, தற்காப்பு, தற்கொலை ஆகியவற்றால் நேர்ந்தவையாகும்.

