தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெடிகுண்டு புரளி; ஜப்பான் விமானம் அவசர தரையிறக்கம்

1 mins read
10b15eb4-30af-49eb-9161-c3a1636d161b
படம்: கியொடொ நியூஸ், கெட்டி இமெஜஸ் -

தோக்கியோ: வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

தோக்கியோவின் நரிடா விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவுக்கு சென்று கொண்டிருந்த அந்த

விமானம், வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து

சுபு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகள்,

6 சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது சிலர் காயமடைந்தனர். தீவிர சோதனைக்குப் பிறகு விமானத்தில் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என என்எச்கே ஊடகம் தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.