இறுதி ஊர்வலத்தின்மீது மோதிய வாகனம்: 19 பேர் பலி

இறுதி ஊர்வலத்தின்மீது மோதிய வாகனம்: 19 பேர் பலி

1 mins read
a2afa3ec-66f5-48a6-b098-3d57f17e12e9
விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது (படம்: ஸின்ஹா) -

சீனாவில் சாலை வழியாக சென்றுகொண்டிருந்த இறுதி ஊர்வலத்தில் கனரக வாகனம் ஒன்று மோதியது. இந்த விபத்தில் 19 பேர் மாண்டனர், 20 பேர் காயமடைந்தனர்.

ஜியாங்ஸி மாநிலத்தில் இந்த விபத்து நேர்ந்தது. இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் சாலை வழியாக நடந்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த கனரக வாகனம் அவர்களை மோதியது. வாகனம் பேழையை ஏந்தியிருந்த வாகனத்தையும் மோதியதாக சீன ஊடகம் தெரிவித்தது.

விபத்தைத் தொடர்ந்து அம்மாநில போக்குவரத்து காவல்துறை வாகனமோட்டிகள் கவனமாக வாகனத்தைச் செலுத்தும்படி அறிவுறுத்தியது. சில பகுதிகளில் பனிமூட்டமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சீனாவில் போக்குவரத்து விதிமுறைகளை பலர் பின்பற்றுவதில்லை. இதனால் அங்கு சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

சென்றாண்டு செப்டம்பரில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 27 பேர் மாண்டனர்.