செனகல் பேருந்து விபத்தில் குறைந்தது 38 பேர் பலி

1 mins read
9550a766-7a7d-4295-8879-d62bbbadb1c2
படம்: செய்க் டியெங் (எஎஃப்பி) -

தாக்கா (சென­கல்): ஆப்­பி­ரிக்க நாடான சென­க­லின் மத்­தி­யப் பகு­தி­யில் நேர்ந்த பேருந்து விபத்­தில் குறைந்­தது 38 பேர் மாண்­ட­தா­க­வும் 87 பேர் காய­ம­டைந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கஃப்ரீன் நக­ருக்கு அருகே இரண்டு பேருந்­து­கள் மோதிக்­கொண்­ட­தால் விபத்து நேர்ந்­தது.

சென­க­லின் மீட்­புப் பணி அதி­காரி ஒரு­வர் இச்­சம்­ப­வம் குறித்து ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வனத்­தி­டம் தக­வல் தந்­தார். சம்­பவம் நிகழ்ந்த பகு­தி­யில் விபத்துக்கு உள்­ளான பேருந்­து­கள் அகற்­றப்­பட்­ட­தா­க­வும் அங்கு இயல்­பு­நிலை திரும்­பி­யுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.