கிருமிப் பரவல் அதிகரிப்பு இராது; மலேசியா நம்பிக்கை

கிருமிப் பரவல் அதிகரிப்பு இராது; மலேசியா நம்பிக்கை

2 mins read
6e13c099-1b05-4b6f-ac50-5651d94b5d01
படம்: பிக்ஸாபே -

புத்­ரா­ஜெயா: தைப்­பூ­சத் திரு­நாள், சீனப் புத்­தாண்டு ஆகி­யவை நெருங்­கி­வ­ரும் வேளையில், மலே­சி­யா­வில் கொவிட்-19 அச்­சம் இல்லை என்று அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்த விழாக்­கா­லத்­தின்­போது மலே­சி­யா­வில் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் அதி­க­ரிப்பு இராது என்று அது மிகுந்த நம்­பிக்­கை ­யு­டன் கூறி­யது. இவ்­வாண்­டின் தைப்­பூ­சத் திரு­விழா, சீனப் புத்­தாண்டு ஆகிய விழாக்­கள் எப்­போ­தும்­போல கொண்­டா­டப்­படும் என்­றும் வழக்­க­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் நட­வ­டிக்­கை­கள் இம்­மு­றை­ நடப்­பில் இருக்­கும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு மலே­சி­யா­வில் நோன்­புப் பெரு­நாள் உட்­பட பல விழாக்­கள் கொண்­டாடப்­பட்­ட­தா­க­வும் அவற்­றின் கார­ண­மாக கொவிட்-19 பாதிப்பு மோச­ம­டை­ய­வில்லை என்­றும் மலே­சிய சுகா­தார அமைச்சு கூறி­யது.

எனவே, கடந்த ஆண்டு கடைப்­பி­டிக்­கப்­பட்ட அதே உத்­தி­கள் இவ்­வாண்­டும் கையா­ளப்­படும் என்று அது தெரி­வித்­தது.

மலே­சி­யா­வில் அன்­றாட கொவிட்-19 பாதிப்­பும் அந்­நோ­யால் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் குறைந்து வரு­வ­தாக அந்­நாட்­டின் சுகா­தா­ரத்­துறை தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா கூறி­னார்.

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க பல உத்­தி­கள் கையா­ளப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்த டாக்­டர் நூர், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கையை உன்­னிப்­பா­கக் கண்­கா­ணிப்­ப­தும் புதிய, உரு­மா­றிய கிரு­மி­வ­கை­கள் உரு­வெ­டுத்­தி­ருக்­கின்­ற­னவா என்­பதை கண்டு­பி­டிக்க கழி­வு­நீர் சோத­னை­யி­டப்­ப­டு­வ­தும் அவற்­றில் அடங்­கும் எனத் தெரி­வித்­தார்.

கொவிட்-19 பாதிப்பு மோச­ம் அடை­யக்­கூ­டும் என்பதை உணர்த்தக்கூடிய குறிப்­பிட்ட சில அறி­கு­றி­கள் தென்­பட்­டால் கடு­மை­யான கிரு­மிப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­படும் என்­றார் அவர்.

மலே­சி­யா­வுக்­குச் செல்­லும் வெளி­நாட்டுப் பய­ணி­க­ளி­டையே கொவிட்-19 கிரு­மித்­தொற்று அதி­க­ரிப்பு, ஓமிக்­ரா­னைத் தவிர்­த்து புதிய, உரு­மா­றிய கிருமிவ­கை­கள் தலை­தூக்­கு­வது, கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பது போன்ற அறி­கு­றி­கள் தென்பட்டால் உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கொவிட்-19 கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தா­லும் கடு­மையான கட்­டுப்­பா­டு­களை நடைமுறைப்படுத்துவது குறித்து பரி­சீ­லனை செய்­யப்­படும் என்று டாக்­டர் நூர் கூறி­னார்.