மோன்ட்டேசிட்டோ: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாகப் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 12 பேர் மாண்டுவிட்டனர்.
மேலும் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அங்கு வசிக்கும் கிட்டத்தட்ட 25,000 பேரை அமெரிக்க மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றினர்.
வெள்ளம் காரணமாக கலிஃபோர்னிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
படம்: ஏஎஃப்பி

