லண்டன்: வேலைநிறுத்தம் தொடர்பாகப் புதிய சட்டம் ஒன்றை பிரிட்டன் அறிமுகப்படுத்த இருக்கிறது.
அதன்படி, ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும்போது குறைந்தபட்ச பாதுகாப்பை நிலைநாட்ட சம்பந்தப்பட்ட பொதுச் சேவைகள் தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.
தற்போது பிரிட்டனில் மிக மோசமான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதைச் சமாளிக்கக்கூடிய சம்பள உயர்வு கிடைக்காததால் அந்நாட்டில் உள்ள பல்வேறு முக்கியமான துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் அண்மையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் தாதியர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ரயில் சேவை ஊழியர்கள் ஆகியோர் அடங்குவர்.

