அரசாங்க ஆதரவுடன் நடத்தப்பட்டதாக சந்தேகம்

அரசாங்க ஆதரவுடன் நடத்தப்பட்டதாக சந்தேகம்

1 mins read
ad6954f6-3a30-4d45-abe8-d3243628ba46
படம்: பிக்ஸாபே -

சிங்­கப்­பூர்: ஆசிய நாடு ஒன்­றின் அர­சாங்­கத்­து­டன் தொடர்­பு­டை­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் ஒரு குழு தென்­கி­ழக்­கா­சிய, ஐரோப்­பிய நாடு­கள் பல­வற்­றின் உய­ரிய அர­சாங்க, ராணு­வத் தளங்­களை ஊடு­ரு­வி­யுள்­ள­தாக குரூப்-ஐபி எனும் இணை­யப் பாது­காப்பு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

'டார்க் பிங்க்' என்று அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள புதிய ஊடு­ரு­வல் குழு, ஒரு­வ­ரைத் தனிப்­பட்ட தக­வல்­களை வெளி­யி­டத் தூண்­டும் மின்­னஞ்­சல்­கள், உய­ரிய தீங்­கு­நி­ரல்­கள் போன்றவற்றைக் கொண்டு பிலிப்­பீன்ஸ், மலே­சியா ஆகிய நாடு­களின் ராணு­வத் தளங்­களை ஊடு­ரு­வி­யி­ருக்­கிறது. அதோடு, கம்­போ­டியா, இந்­தோ­னீ­சியா, போஸ்­னியா-ஹெர்ட்­ஸொ­கொ­வினா ஆகிய நாடு­க­ளின் அர­சாங்க அமைப்­பு­க­ளை­யும் குறி­வைத்­தி­ருக்­கிறது.

சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாதத்­துக்­கும் டிசம்­பர் மாதக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் அந்த ஊடு­ரு­வல் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றன. வியட்­னா­மில் உள்ள ஒரு லாப நோக்­கில்லா அமைப்பு, சம­யம் சார்ந்த அமைப்பு உள்­ளிட்­ட­வை­யும் குறி­வைக்­கப்­பட்­ட­தாக குரூப்-ஐபி குறிப்­பிட்­டது.

அந்­நி­று­வ­னம் நேற்று வெளி­யிட்ட அறிக்கையில் இந்த விவ­ரங்­கள் தெரி­விக்­கப்­பட்­டன. இந்த விவ­கா­ரம் குறித்து கருத்து தெரி­விக்க வேண்­டு­கோள் விடுத்து சம்­பந்­தப்பட்ட அர­சாங்க, ராணுவ அமைப்­பு­களுக்கு மின்­னஞ்­சல்­கள் அனுப்­பப்­பட்­டன. ஆகக் கடைசி நில­வ­ரப்­படி அவை பதி­ல­ளி­க்க­வில்லை.

"டார்க் பிங்க்­கின் செயல் குறிப்­பி­டத்­தக்­கது. கட்­ட­மைப்­பு­களை ஊடு­ருவி ரக­சி­யங்­க­ளைத் திருட அக்­குழு முயற்சி செய்தது தெளி­வா­கத் தெரி­வதே அதற்­குக் கார­ணம்," என்­றார் குரூப்-ஐபி நிறு­வ­னத்­தின் தீங்­கு­நி­ரல் கவ­னிப்­பா­ளர் ஆண்ட்ரே பொலொ­வின்­கின் கூறி­னார்.

தென்கிழக்காசியாவில் பல அரசாங்க, ராணுவத் தளங்கள் ஊடுருவப்பட்டன