ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் கோபத்தில் ஆடவர் ஒருவர் வாகனத்தை ஒரு ஹோட்டலுக்குள் வேகமாக ஓட்டிச் சென்றிருக்கிறார். ஹோட்டலுக்குள் இருந்தபடி வேகமாக வாகனத்தை ஓட்டியும் இருக்கிறார்.
இச்சம்பவம் ஷாங்காயின் கிராண்ட் டிரஸ்டல் பர்ப்பல் மவுன்ட்டன் ஹோட்டலில் நேற்று முன்தினம் நிகழ்ந்ததாக உள்ளூர் காவல்துறையினர் கூறினர். காணாமற்போன தனது மடிக்கணினி குறித்து ஆடவர் சினம் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

