தாய்லாந்தின் புதிய சுற்றுப்பயணக் கட்டணம்

தாய்லாந்தின் புதிய சுற்றுப்பயணக் கட்டணம்

1 mins read
f264f7c2-41ad-44a6-b3f1-fab34b568dd9
-

பேங்­காக்: இவ்­வாண்டு ஜூன் மாதம் முதல் வெளி­நா­டு­க­ளி­லிருந்து வரும் சுற்­றுப் பய­ணி­களி­ட­மி­ருந்து சுற்­றுப் பய­ணக் கட்­ட­ண­மாக ஆளுக்கு 300 பாட் (11.90 வெள்ளி) தொகை­யைப் பெற தாய்­லாந்து திட்­ட­மிட்­டுள்­ளது. விபத்­துகளில் சிக்­கிக்­கொள்­ளும் சுற்­றுப் பய­ணி­க­ளுக்கு உத­வ­வும் சுற்­று­லாத்­தலங்­களை மேம்­ப­டுத்­த­வும் அந்­தத் தொகை பயன்­ப­டுத்­தப்­படும் என்று தாய்­லாந்­தின் சுற்­றுப்­ப­ய­ணத் துறை அமைச்­சர் ஃபி­ஃபாட் ரட்­ச­கிட்­பி­ரக்­கார்ன் நேற்று தெரி­வித்­தார்.

வேலை அனு­மதி அட்டை உள்ளிட்டவற்றை வைத்­தி­ருப்­போர் புதிய சுற்­றுப்­ப­ய­ணக் கட்­ட­ணத்தைச் செலுத்­தத் தேவை­யில்லை என்­ப­தை­யும் திரு ஃபிஃபாட் குறிப்­பிட்­டார்.