பதிலடியைத் தற்காத்துப் பேசும் சீனா

பதிலடியைத் தற்காத்துப் பேசும் சீனா

1 mins read
6da1869f-cdfb-407c-b8c8-f8af0f1cd600
படம்: பிக்ஸாபே -

பெய்­ஜிங்: தென்­கொ­ரியா, ஜப்­பான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்கு எதி­ரா­கத் தான் விதித்­துள்ள கட்­டுப்­பா­டு­களை சீனா தற்­காத்­துப் பேசி­யுள்ளது.

ஜப்­பான், தென்­கொ­ரியா செல்­லும் சீனா­வைச் சேர்ந்­தோர் பய­ணம் மேற்­கொள்­வ­தற்கு முன்பு கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது. அதற்­குப் பதி­ல­டி­யாக அவ்­விரு நாட்­ட­வ­ருக்­கும் குறு­கிய காலத்­துக்­கான விசா வழங்­கு­வதை சீனா நிறுத்தி வைத்­துள்ளது.

இதற்­கி­டையே, குறைந்த விலை­யில் கொவிட்-19 மருந்­து­களைப் பெற சீனா முயற்சி செய்வதாகக் கூறப்­ப­டு­கிறது. கொவிட்-19 மருந்து வகைகளைத் தயாரிக்கும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஃபைசர், மெர்க் ஆகியவை அதை எதிர்ப்பதுபோல் தெரிகிறது.

மொல்னுப்பிரவிர் என்ற கொவிட்-19 மருந்தை மெர்க் நிறுவனம் தயாரக்கிறது. பேக்ஸ்லாய்ட்டைத் தயாரிக்கிறது ஃபைசர் நிறுவனம்.