பாரிஸ் நகரில் கத்திக் குத்து; அறுவர் காயம்

பாரிஸ் நகரில் கத்திக் குத்து; அறுவர் காயம்

1 mins read
4c3619ac-565a-498a-86c1-aae3409cac80
-

பாரிஸ்: பிரான்ஸ் தலை­ந­கர் பாரி­சில் உள்ள பாரிஸ் கரே டு நோர்ட் ரயில்வே நிலை­யத்­தில் நேற்று கத்­திக் குத்­துத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. தாக்குதலில் குறைந்­தது அறு­வர் காய­ம­டைந்­த­னர்.

ஒரு­வர் பலத்த காயங்­க­ளுக்கு ஆளா­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

தாக்­கு­தலை நடத்­திய ஆட­வ­ரைக் காவல்­து­றை­யி­னர் பல­முறை சுட்­ட­னர். பிறகு அவர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

ஆட­வ­ரைச் சுட்ட காவல்­துறை அதி­காரி அந்த நேரத்­தில் பணி­யில் இல்லை என்­றும் சில தக­வல்­கள் தெரி­வித்­தன.

தாக்­கு­தல் பயங்­கர­வா­தச் செய­லாக வகைப்­ப­டுத்­தப்­படவில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பாரிஸ் கரே டு நோர்ட், ஐரோப்­பா­வில் ஆக அதிக ரயில் சேவை­கள் இயங்­கும் நிலை­யங்­களில் ஒன்று.