லண்டன்: பிரிட்டனில் இங்கிலாந்துத் தலைநகர் லண்டனின் ஹீத்ரோ அனைத்துலக விமான நிலையத்தில் யுரேனியம் வைக்கப்பட்டிருந்த பொட்டலம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து பிரிட்டிஷ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்ற மாதம் 19 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட சோதனை ஒன்றில் யுரேனியம் இருந்த பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
அப்பொட்டலம் பாகிஸ்தானைச் சேர்ந்தது. அது ஓமானிலிருந்து வந்த விமானத்தில் பிரிட்டனுக்குக் கொண்டு வரப்பட்டதாக 'தி சன்' நாளிதழ் தெரிவித்தது.
பறிமுதல் செய்யப்பட்ட யுரேனியத்தின் அளவு மிகவும் சிறிது என்றும் அதனால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி ஒருவர் அந்நாட்டுச் செய்தியாளர்களிடம் கூறினார்.

