அமெரிக்கா-ஜப்பான் தற்காப்பு உறவு மேலும் வலுப்படுகிறது

அமெரிக்கா-ஜப்பான் தற்காப்பு உறவு மேலும் வலுப்படுகிறது

1 mins read
381adfec-d5e2-444f-b3cd-f466856e0c4d
படம்: ப்ளூம்பர்க் -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வும் ஜப்­பா­னும் நிலம், கடல் வழி மட்­டு­மன்றி விண்­வெ­ளி­யி­லும் தற்­காப்பு உறவை வலுப்­ப­டுத்­தும் திட்­டங்­களை ஆராய்ந்து வருகின்­றன.

ரஷ்­யா­வு­டன் கைகோத்­துள்ள சீனா­வைச் சமா­ளிக்­கும் வித­மாக இந்­ந­ட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது.

வாஷிங்­ட­னில் அமெ­ரிக்க, ஜப்­பா­னிய அதி­கா­ரி­கள் தற்­காப்பு ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­வது குறித்து பேச்சு நடத்­தி­னர்.

அதன்பிறகு பேசிய இரு நாடுகளின் அதி­கா­ரி­கள், விண்வெளி தற்­காப்பு உறவை வலுப்படுத்­து­வ­தற்­கான இணக்­கக் குறிப்பு ஒன்­றில் இரு தரப்­பும் கையெ­ழுத்­தி­டும் என்று கூறி­னர்.

ராணு­வப் பயிற்­சி­களை அதிகரிக்­க­வும் சீனா­வின் மிரட்­ட­லுக்கு தகுந்த பதி­லடி கொடுக்­கும் விதமாக இவ்­வட்­டா­ரத்­தில் தங்­களுடைய படை­களை ஒழுங்­குப்படுத்­த­வும் இரண்டு நாடு­கள் கடப்­பாடு தெரி­வித்­துள்­ளன.

இவ்­வா­ரத்­தின் பிற்­ப­கு­தி­யில் ஜப்­பா­னிய பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா அமெ­ரிக்­கா­வுக்­குப் பய­ணம் மேற்­கொள்­கி­றார்.

இதை­யொட்டி இரு நாடு­க­ளின் அதி­கா­ரி­கள் பேச்சு நடத்தி உள்­ள­னர்.

சீனா­வின் ஆக்­ரோஷமான செயல்­கள் குறித்து இரு நாடு­களும் எந்த அள­வுக்கு கவலை கொள்­கின்­றன என்­பதை இந்­தப்­ பேச்சு காட்­டு­கிறது.

"சீனா­வின் படை­கள் ஆத்­திரமூட்­டும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

"தைவான் மீதான அணு­கு­மு­றை­யில் புதிய வழக்­கத்தை அது நிலை­நாட்ட முயற்சி செய்­கிறது," என்று அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்­சர் லாயிட் ஆஸ்­டின் கூறி­னார்.

தைவான் நீரி­ணை­யில் சீனா­வின் நட­மாட்­டம் அதிகரித்து வரு­வ­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

ரஷ்­யா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான ராணுவ ஒத்­து­ழைப்பு விரி­வ­டைந்து வரு­வது குறித்த பொது­வான எண்­ணங்­களை ஜப்­பா­னிய, அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர் என்று ஜப்­பா­னிய வெளி­யுறவு அமைச்­சர் யோஷி­மாசா ஹயாஷி தெரி­வித்­துள்­ளார்.