வாஷிங்டன்: வீட்டில் உணவு சமைக்கப் பயன் படுத்தப்படும் சமையல் எரிவாயுவுக்கும் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் 12 விழுக்காடு ஆஸ்துமா சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கும் ஆய்வு புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
வீட்டில் மின்சார அடுப்பு அல்லது இண்டக்ஷன் சாதனம் இருந்திருந்தால் ஏறக்குறைய 650,000 அமெரிக்க குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட்டிருக்காது என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதற்கு, மற்றவர் சிகரெட் புகையை சுவாசிப்பதற்குச் சமம் என்று அவர்கள் ஒப்பிட்டுள்ளனர். இருந்தாலும் ஆய்வை மேற் கொண்ட நிபுணர்களில் ஒருவர், விறகு, கரி, நிலக்கரி அடுப்பு களைவிட சமையல் எரிவாயு அடுப்பு ஆரோக்கியமானது என்று கூறியுள்ளார்.
வளரும் நாடுகளில் இன்னமும் விறகு, நிலக்கரி, கரி அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் காற்றுத் தூய்மைக்கேட்டுக்கு ஆண்டுக்கு 3.2 மில்லியன் பேர் பலியாவதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.
புதிய ஆய்வு, என்விரான் மெண்டல் ரிசர்ச் அண்ட் பப்ளிக் ஹெல்த் எனும் அனைத்துலக சஞ்சிகையில் வெளியிடப்பட்டு உள்ளது.
முந்தைய 41 ஆய்வுகளைக் கொண்டு 2013ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மறு ஆய்வின்படி சமையல் எரிவாயு பயன்படுத்தும் வீட்டில் ஆஸ்துமா ஏற்படும் ஆபத்து குறித்து கணக்கிடப்பட்டது.
அமெரிக்க மக்கள்தொகை யுடன் ஆய்வின் விவரங்களைக் கணக்கிட்டால் 12.7 விழுக்காடு குழந்தைப் பருவ ஆஸ்துமா சம்பவங்களுடன் சமையல் எரிவாயுவுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதே கணக்கீட்டைப் பயன் படுத்தி வெளியிடப்பட்ட ஆய்வும் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயுவுடன் குழந்தைப்பருவ ஆஸ்துமாவுக்குத் தொடர்பு இருப் பதாகத் தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கையை எரி பொருள் நிறுவனமான கிளாஸ்ப் மற்றும் ஐரோப்பிய பொதுச் சுகா தாரக் கூட்டணி வெளியிட்டன.
சமையல் எரிவாயு எரியும் போது நைட்ரஜன் டையாக்சைடு வெளிப்படுகிறது. இதனால் ஏற்படும் காற்றுத்தூய்மைக் கேட்டுக்கும் இதர சுவாசப் பிரச்சினை களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

