உடை மாற்றும் அறையில் கேமரா; மலேசிய எச்அண்ட்எம் புகார்

உடை மாற்றும் அறையில் கேமரா; மலேசிய எச்அண்ட்எம் புகார்

1 mins read
6fe2b233-cff1-4f7e-8052-80cb502c069d
படம்: பிக்ஸாபே -

பெட்­டா­லிங் ஜெயா: கோலா­லம்­பூர் கடை­யில் உடை மாற்­றும் அறை­யில் மறைத்து வைக்­கப்­பட்ட கேம­ரா­வி­லி­ருந்து பதிவு செய்த காட்­சி­கள் இணை­யத் தளத்­தில் விற்­கப்­ப­டு­வ­தாக டுவிட்­டர் பதி­வா­ளர்­கள் சிலர் கவலை தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இதை­ய­டுத்து அக்­க­டை­யின் உரி­மை­யா­ள­ரான சிலாங்­கூர் எச்­அண்ட்­எம் காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளது.

"எங்­க­ளு­டைய வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பாது­காப்பு மிக முக்­கி­யம், இது தொடர்­பாக காவல் துறை­யில் புகார் அளித்­துள்­ளோம், விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது," என்று அந்­நி­று­வ­னம் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்­தது. கடை­யில் உள்ள அனைத்து உடை மாற்­றும் அறை­களையும் சோத­னை­யிட்டு, பாது­காப்பு விதி­மீ­றல் இல்லை என்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் அறிக்கை குறிப்­பிட்­டது.

சுவீ­ட­னைத் தள­மா­கக் கொண்டு செயல்­படும் எச்­அண்ட்­எம் நிறு­வ­னம், ஆண்­கள், பெண்­கள், குழந்­தை­கள், பதின்ம வய­தி­ன­ருக்­கான நவ­நா­க­ரிக உடை­களை விற்று வரு­கிறது.

உடை மாற்­றும் அறை­யில் பதிவு செய்­யப்­பட்ட தம்­ப­தி­யர் மற்­றும் தனிப்­பட்­ட­வர்­க­ளின் காணொ­ளி­கள் என்று கூறி மலே­சி­யா­வில் உள்ள இணை­யத் தளங்­களில் ஒரு­வர் விற்­­ப­தாக தக­வல் வெளி­யா­ன­தைத் தொடர்ந்து எச்­அண்ட்­எம் புகார் அளித்­துள்­ளது.

கடந்த ஜன­வரி 8ஆம் தேதி முதல் முறை­யாக ஒரு பெண் டுவிட்­டர் பதி­வில் இது பற்றி குறிப்­பிட்டு இருந்­தார். அந்­தப் பதிவை அவர் பின்­னர் அழித்­து­விட்­டார். ஒரு காணொ­ளி­யில் தாம் இருந்­த­தா­க­வும் கடந்த அக்­டோ­ப­ரில் அது பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம் என்­றும் அவர் தெரி­வித்­தி­ருந்­தார். இந்த நிலை­யில் காவல்­துறை இந்த விவ­கா­ரத்தை தீவி­ர­மாக விசா­ரித்து வரு­கிறது.