செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
30e0a204-a8e7-4446-bae2-e5edfb2bdb92
-

எண்ணெய் ஏற்றுமதி கட்டுப்பாடு

கோலாலம்பூர்: ஐரோப்பிய நாடுகளுக்கு செம்பனை எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்படலாம் என்று மலேசிய அரசாங்கம் நேற்று தெரிவித்தது. காடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் செம்பனை எண்ணெய் விற்பனையைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செம்பனை எண்ணெய் ஏற்றுமதியை மலேசியா நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய செலவின அளவு

கோலாலம்பூர்: மலேசியா, முந்தைய அரசாங்கம் நிர்ணயித்த 2023ஆம் ஆண்டிற்கான செலவின அளவை தொடர்ந்து கடைப்பிடிக்கும் எண்ணத்தில் உள்ளது. அதே சமயத்தில் 2023ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட செலவினத் திட்டத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் திட்டங்களை விரைவுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொருளியல் அமைச்சர் கூறினார்.

துரோகிகளுக்கு மன்னிப்பு

கோலாலம்பூர்: பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியை ஆதரிக்க விரும்பிய துரோகிகளை மன்னித்துவிட்டதாக அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டாக்டர் அஹமட் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியை ஆதரிக்க விரும்பினர்.