தந்தைக்கு ஏற்பட்ட அதே மாரடைப்பு: பாடகி மரணம்

தந்தைக்கு ஏற்பட்ட அதே மாரடைப்பு: பாடகி மரணம்

1 mins read
e3b26639-a5d9-4e86-887b-88641c77e0ac
-
Google News Preferred Icon

நியூயார்க்: மறைந்த 'ராக் அண்ட் ரோல்' இசைச் சக்கரவர்த்தியின் ஒரே மகளும் பாடகியுமான லிசா மேரி பிரேஸ்லி (படம்) தமது 54 வது வயதில் மரணமடைந்ததாக அவரது தாயார் அறிவித்தார். லிசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தாக அமெரிக்க ஊடகங்கள் கூறின. இந்த திடீர் மரணத்தால் லிசாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்தனர். ஆகக் கடைசி யாக இவ்வாரத் தொடக்கத்தில் தமது தந்தை குறித்த 'எல்விஸ்' திரைப்படத்துக்கு ஆதரவு தெரி விக்கும் விருதளிப்பு நிகழ்ச்சி ஒன்றில் லிசா பங்கேற்று இருந்தார். இவரது தந்தை எல்விஸ் பிரேஸ்லியும் 1977ஆம் ஆண்டு தமது 42வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.