விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

3 mins read
1ca4188d-cb43-4911-8519-b5c9fd022af1
-

மலேசிய பொது விருதுப் போட்டி: லோ கியன் இயூ வெளியேறினார்

சிங்கப்பூர்: மலேசிய பொது விருது பூப்பந்துப் போட்டியில் தொடர்ச்சி யாக 4வது முறை தோல்வியைத் தழுவிய சிங்கப்பூரின் லோ கியன் இயூ (படம்) போட்டியிலிருந்து வெளியேறினார்.

தாய்லாந்தின் குன்லாவுட் விட்டிட்சம் என்ற வீரரிடம் நேற்று லோ 21-11, 20-22, 21-14 என 80 நிமிடங்கள் போராடித் தோற்றார். போட்டிக்குப் பின் பேசிய லோ, "ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது புத்தாண்டு மோசமாகத் தொடங்க வில்லை. எனது தகுதிக்கு ஏற்றவாறு நான் விளையாடி னேன். நான் இன்னும் நன்றாகச் செய்வேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.

"ஆனால், போட்டி என வந்துவிட்டால் அதில் ஒருவர் தான் வெற்றிபெற முடியும். என்னால் முடிந்த மட்டும் விளையாடினேன். இனி அடுத்த போட்டிக்கு என்னைத் தயார் செய்துகொள்வேன். எனக்குள் நானே வைத்து இருந்த எதிர்பார்ப்புகளையும் தடைகளையும் தாண்டி வந்து உள்ளேன். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் நிறைய முன்னேறவேண்டியுள்ளது. ஆனால், இப்போதைய நிலையில் எனக்குத் தேவை ஓய்வு. அதன்பின், அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்திய பொது விருதுப் போட்டி யில் பங்கேற்பேன்," என்று

லோ கூறினார்.

தோல்வியைத் தொடர்ந்து சோதனை

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் போட்டி ஒன்­றில் நேற்று அதி­காலை ஃபுல்ஹம் குழு­வி­டம் தோற்ற செல்­சிக்கு அடுக்­க­டுக்­கான சோதனை ஏற்­பட்டு வரு­கிறது. ஆட்­டத்­தில் ஜோ ஃபிலிக்ஸ் என்ற வீரர் அபா­யம் விளை­விக்­கும் வகை­யில் ஆடி­ய­தற்­காக சிவப்பு அட்டை காண்­பிக்­கப்­பட்டு வெளி­யேற்­றப்­பட்­டார். அத்­து­டன், செல்­சிக்கு எதி­ரான முதல் கோல் அதன் கோல்­காப்­பா­ளர் கெப்பா அரி­சா­ப­லாகா என்­ப­வ­ரின் தவற்­றால் ஏற்­பட்­டது.

அந்த முதல் கோலைப் போட்­ட­வர் முன்பு செல்­சிக்­காக விளை­யா­டிய வில்­லி­யன் என்­ப­வர். இது போதா­தென்று ஆகக் கடை­சி­யாக அனைத்து போட்­டி­க­ளி­லும் விளை­யா­டிய 10 ஆட்­டங்­களில் ஏழில் செல்சி தோல்­வி­யைத் தழு­வி­யுள்­ளது. குழு­வின் இந்த இக்­கட்­டான நிலையை பிரி­தி­ப­லிக்­கும் விதத்­தில் குழு­வின் நிர்­வாகி கிர­ஹேம் போட்­டர் தமது குழு­வி­னரை ஒன்றிணைந்து ஒரே அணியாகச் செயல்­ப­டு­மாறு கெஞ்­சிக் கேட்­டுக் கொண்­டுள்­ள­தாக ஏஎ­ஃப்பி செய்­தித் தக­வல் கூறு­கிறது.

ஃபுல்ஹம் குழு­வின் வில்­லி­யன் செல்­சிக்கு எதி­ராக முதல் கோலைப் போட்­ட­பின் இரண்­டாம் பாதி ஆட்­டத்­தில் செல்­சி­யின் குலி­பாலி தமது அணி சார்­பாக ஒரு கோல் போட்டு ஆட்­டத்தை சமன் செய்­தார்.ஆனால், செல்­சி­யின் ஜோ ஃபிலிக்ஸ் ஆட்­டத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட பின் ஃபுல்ஹ­மின் கார்­லோஸ் வினி­ஷி­யஸ் ஆட்­டத்­தின் கடை­சிக் கட்­டத்­தில் ஒரு கோல் போட்டு செல்சி நிர்­வா­கி­யான போட்­ட­ருக்கு தீராத தலை­வ­லி­யைக் கொடுத்­துள்­ளார். தற்­போ­தைய நிலை­யில், செல்சி நிர்­வாகி போட்­டர் பதவி நீக்­கம் செய்­யப்­ப­ட­லாம் என்ற பேச்சு அடி­ப­டு­கிறது.

பயணம் கிளப்பிய பரபரப்பு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் ராகுல் டிராவிட் உடல்நலப் பிரச்சினை காரண மாக நேற்று திடீரென்று தனியாக பெங்களூரு கிளம்பிச் சென்றார். இது சமூக ஊடகங்களில் பலவிதமாகப் பரபரப்பானது. இலங்கையுடன் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது தமக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பதாக ராகுல் கூறியிருந்தார். இதற்கிடையே, டிராவிட்டின் உடல்நலம் குறிப்பிடும்படி பாதிக்கப்படவில்லை என்றும் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது ஆட்டத்திற்கான பயிற்சியை அளிக்க அவர் இன்று வந்துவிடுவார் என்றும் சில தகவல்கள் கூறின. டிராவிட் இரு நாள்களுக்கு முன்னர் தமது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

கர்ப்பமுற்றதால் தற்காலிக ஓய்வு

மயாமி: உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரமான நவோமி ஒசாகா, 25, (படம்) தாம் கர்ப்பமடைந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனால் அடுத்த ஆண்டுவரை டென்னிஸ் விளையாடுவதில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறினார். கடந்த செப்டம்பர் முதல் இவர் எந்தவொரு டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.