ஹண்ட்ஸ்வில் (அலபாமா): சூறாவளி சூறையாடியதில் அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமா மாநிலத்தில் ஆறு பேர் மரண
மடைந்தனர். சூறாவளி சீற்றம் அடைந்து பலமாக வீசிய காற்றில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அலபாமா, ஜார்ஜியா, மிசிசிபி மாநிலங்களில் ஏற்பட்ட மின்தடையால் பல்லாயிரக்கணக்கானோர் இருட்டில் தவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜார்ஜியா, அலபாமா மாநிலங்களின் ஆளுநர்கள் அவசரநிலையை அறிவித்தனர்.

