நிதி இறுக்கத்தால் வேலையின்மை கூடும்: ஐஎம்எஃப்

நிதி இறுக்கத்தால் வேலையின்மை கூடும்: ஐஎம்எஃப்

1 mins read
71e4a26f-22c9-4a96-abfd-1203e104b8ea
-

வாஷிங்­டன்: இறுக்­க­மான நிதி நில­வ­ரத்­தின் தாக்­கத்தை உலக நாடு­கள் இனி­மேல்­தான் உணர உள்­ள­தாக ஐஎம்எஃப் எனப்படும் அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தின் தலை­வர் கிறிஸ்­ட­லினா ஜியார்­ஜீவா தெரி­வித்து உள்­ளார்.

உலக வளர்ச்சி இவ்­வாண்­டில் மெது­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அமெ­ரிக்க மத்­திய வங்கி உள்­ளிட்ட பல நாடு­க­ளின் மத்­திய வங்­கி­கள் விலை­வாசி உயர்­வின் தாக்­கத்தை ஈடு­கட்­டும் வகை­யில் வட்டி விகி­தங்­களை உயர்த்தி உள்­ளன.

அமெ­ரிக்­கா­வில் வீட­மைப்பு போன்ற சில துறை­கள் தள்­ளாடி வரு­கின்­றன. இருப்­பி­னும் வேலை­வாய்ப்­பின்மை குறை­வாக உள்­ளது.

"விலை­வாசி உயர்ந்­தா­லும், இப்­போ­தைக்கு மக்­கள் வேலை­யில் இருந்­தா­லும் இறுக்­க­மான நிதி நில­வ­ரம் வேலை­வாய்ப்பில் ஏற்­ப­டுத்­தப் போகும் தாக்­கம் இனி­மேல்­தான் வெளிப்­படும். இதனை நாங்­கள் நன்கு உணர்ந்­தி­ருக்­கி­றோம்," என்றார் அவர்.