மேலும் 5 போதைக் குற்றவாளிகளை சுட்டுக்கொன்றது தாய்லாந்து ராணுவம்

மேலும் 5 போதைக் குற்றவாளிகளை சுட்டுக்கொன்றது தாய்லாந்து ராணுவம்

1 mins read
02d20744-fa3f-49e3-853b-4a4c01c0f3be
-

பேங்­காக்: போதைப்பொருள் கடத்­தல்­கா­ரர்­கள் ஐவரை தாய்­லாந்து ராணு­வம் சுட்­டுக் கொன்­று­விட்­டது. நாட்­டின் வடக்கே உள்ள காட்­டுப் பகு­தி­யில் அவர்­கள் கொல்­லப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் நேற்று கூறி­னர். இரண்டு மாதங்­களில் நடை­பெற்­றி­ருக்­கும் மூன்­றா­வது போதைக் கடத்­தல் ஒழிப்பு சம்­ப­வம் இது.

இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் ஏற்­கெ­னவே ஆறு பேர் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். டிசம்­பர் மாத­மும் ஒரு துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டது.

தாய்­லாந்து, லாவோஸ், மியன்­மார் ஆகி­ய­வற்­றின் முக்­கோண எல்லை அருகே உள்ள சிங் ராய் மாகா­ணத்­தில் வியா­ழக்­கி­ழமை அதி­காலை ஐவ­ரும் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர். இப்பகுதி சட்­ட­

வி­ரோத போதைப்­பொ­ருள் வர்த்­தக மைய­மாக விளங்குகிறது. போதைப்­புழக்­கம் இந்த வட்­டா­ரத்­தில் அதி­க­மாக இருப்­பதை உணர்ந்த ராணு­வத் தள­பதி, அண்­மைய சட்ட அம­லாக்க நட­வ­டிக்­கை­களை அதி­கா­ரிக்க உத்­த­ர­விட்­ட­தாக போதைப்பொருள் ஒழிப்­புப் பணிக்­கு­ழு­வின் அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

கடத்­தல்­கா­ரர்­களை நோக்கி சுட்­ட­போது அவர்­களும் ராணு­வத்­தி­னர் மீது துப்­பாக்­கிச்சூடு நடத்­தி­ய­தா­க­வும் இருப்­பி­னும் ராணுவ வீரர்­கள் யாரும் காய­ம­டை­ய­வில்லை என்­றும் பணிக்­குழு கூறி­யது. இந்­தத் துப்­பாக்­கிச் சண்டை கிட்­டத்­தட்ட ஐந்து நிமி­டங்­க­ளுக்கு நீடித்­தது. முடி­வில், 500,000 போதை மாத்­தி­ரை­களும் ஒரு துப்­பாக்­கி­யும் மாண்­ட­வர்­

க­ளின் இருப்­பி­டங்­களில் இருந்து கைப்­பற்­றப்­பட்­டன.