அபே கொலையாளிமீது குற்றச்சாட்டு

அபே கொலையாளிமீது குற்றச்சாட்டு

1 mins read
82e0d575-dc21-455f-b157-6aeffc5a0734
-

தோக்­கியோ: முன்­னாள் ஜப்­பா­னியப் பிர­த­மர் ஷின்சோ அபே கொலை செய்­யப்­பட்ட வழக்­கில் கைதான ஆடவர்மீது நேற்று குற்­றம் சாட்­டப்­பட்­ட­தாக ஜப்­பா­னிய நீதி­மன்­றம் ஒன்று கூறி­யது.

கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி திரு அபே துப்­பாக்­கி­யால் சுடப்­பட்­ட­தும் காவ­லர்­க­ளால் துரத்தி கைது செய்­யப்­பட்ட 42 வயது டெட்­சுயா யாம­காமி (படம்), நீண்­ட­கால உள­வி­யல் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு இருந்­தார்.

அந்­தப் பரி­சோ­தனை இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் நிறை­வுற்­ற­தைத் தொடர்ந்து அவர் காவல் நிலை­யத்­தி­டம் திருப்பி ஒப்­ப­டைக்­கப்­பட்­டார். யாம­காமி கொலைக் குற்­றச்­சாட்­டோடு ஆயு­தக் கட்­டுப்­பாட்­டுச் சட்­டத்தை மீறிய குற்­றத்­தை­யும் எதிர்­நோக்­கு­வ­தாக நாரா மாவட்ட நீதி­மன்றப் பேச்­சா­ளர்­கெனி­சிரோ நோமுரா ஏஎஃப்பியி­டம் கூறினார். கொலைக்குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.