வலுவான தற்காப்பு ஒத்துழைப்பு: அமெரிக்கா-ஜப்பான் சூளுரை

வலுவான தற்காப்பு ஒத்துழைப்பு: அமெரிக்கா-ஜப்பான் சூளுரை

2 mins read
208251fb-d243-4409-aea5-ee119c5aa9c0
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வும் ஜப்­பா­னும் தற்­காப்பு, பொரு­ளி­யல் துறை­களில் மேலும் அணுக்­க­மாக ஒத்­து­ழைக்க இணங்கி இருக்­கின்­றன.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், ஜப்­பா­னிய பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா இரு­வ­ரும் வாஷிங்­டன் நக­ரில் சந்­தித்­த­னர்.

"இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் பதற்­றம் அதி­க­ரித்து வரு­கிறது. இந்­தச் சூழ­லில் அந்­தப் பகு­தி­யில் அமெ­ரிக்கா-ஜப்­பான் கூட்­ட­ணி­தான் அமை­திக்­கான அடிப்­ப­டை­யாக இருக்­கிறது," என்று இரு தலை­வர்­களும் தெரி­வித்­த­னர்.

தற்­காப்பு, பொரு­ளி­யல் துறை­களில் இரு­நா­டு­களும் மேலும் அணுக்­க­மாக ஒத்­து­ழைக்­கும் என்­றும் அவர்­கள் சூளு­ரைத்­த­னர். பைடன்-கிஷிடா சந்­திப்­பின் போது சீனா­தான் அதிக நேரத்தை எடுத்­துக்­கொண்­டது.

சீனா­வின் மிரட்­டல் அதி­க­மாகி வரு­வ­தா­க­வும் அத­னால் அனைத்­து­லக சட்ட ஒழுங்­கும் வட்­டார நிலைப்­பா­டும் மிரட்­ட­லுக்கு உள்­ளா­வ­தா­க­வும் அந்த இரு தலை­வர்­களும் கூறி­னர்.

வெள்­ளை­ மாளிகையில் ஜப்­பா­னிய பிர­த­மரை வர­வேற்று உப­சரித்த அமெ­ரிக்க அதி­பர், இரு­நா­டு­களும் தங்­கள் ராணுவக் கூட்டணியை நவீ­னப்­ப­டுத்தி வரு­வ­தா­கக் கூறி­னார்.

ஜப்­பான், தன் தற்­காப்­புக்­காக இது­வரை இல்­லாத அள­வுக்­குச் செல­விடத் திட்­ட­மிட்­டுள்­ளது.

இதற்­கும் ஜப்­பா­னின் புதிய தேசிய பாது­காப்பு உத்­திக்­கும் அமெ­ரிக்கா ஆத­ரவு அளிப்ப தாக­வும் திரு பைடன் குறிப்­பிட்­டார்.

"தெள்­ளத்­தெ­ளி­வாகச் சொல்­கிறேன். அமெ­ரிக்கா-ஜப்­பான் கூட்டணியை, அதை­விட முக்­கி­ய­மாக ஜப்­பா­னின் தற்­காப்பு ஆற்­றலை வலுப்­ப­டுத்த முழு­மை­யாக, முற்­றி­லுமாக அமெ­ரிக்கா கடப்­பாடு கொண்­டுள்­ளது," என்று அதி­பர் பைடன் உறுதிகூறி­னார்.

அமை­திக்­குப் பாதிப்பு இல்­லாத வழி­களில் விண்­வெ­ளியை ஆராய்­வ­தில் ஒத்­து­ழைப்பை அதி­கப்­ப­டுத்­தும் உடன்­பாட்­டில் இரு நாடு­களும் கையெ­ழுத்திட்­டன.

இரு நாடு­களும் கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டன.

சீனா, வட­கொ­ரியா, ரஷ்யா ஆகிய மூன்று நாடு­களும் இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தின் அமை­தி­யை­யும் செழிப்­பை­யும் கெடுக்­கின்­றன என்று அந்தக் கூட்­டறிக்கை தெரி­வித்­தது.